• Nov 06 2024

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை - 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

Chithra / Jan 10th 2024, 9:26 am
image

Advertisement


நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதன்படி, பதுளை, மொனராகலை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹாலி-எல, 7ஆம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை - பண்டாரவளை வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.

நேற்றிரவு அங்கு மண்சரிவு ஏற்பட்டிருந்ததுடன் அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மாணிக்க கங்கை பெருக்கெடுத்து நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் செல்லக்கதிர்காமம் புனித பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக யாத்திரிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தின் மனம்பிட்டிய - கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை - 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.இதன்படி, பதுளை, மொனராகலை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, ஹாலி-எல, 7ஆம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை - பண்டாரவளை வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.நேற்றிரவு அங்கு மண்சரிவு ஏற்பட்டிருந்ததுடன் அதனை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை மாணிக்க கங்கை பெருக்கெடுத்து நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் செல்லக்கதிர்காமம் புனித பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதன் காரணமாக யாத்திரிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தின் மனம்பிட்டிய - கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement