• Sep 17 2024

பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்களை வழங்கிய இலங்கை

Chithra / May 31st 2024, 12:22 pm
image

Advertisement



இலங்கை பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்களை (corneas) நன்கொடையாக வழங்கியுள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வுப்பெற்ற எட்மிரல் வீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை உலகிற்கு 88,000 கருவிழிப்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. 

அதில் பாகிஸ்தானுக்கே அதிகளவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலிலிருந்து ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் `கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. 

இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே எவருக்கும் ஏற்புடையதாகிவிடும்  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்களை வழங்கிய இலங்கை இலங்கை பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்களை (corneas) நன்கொடையாக வழங்கியுள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வுப்பெற்ற எட்மிரல் வீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.இலங்கை உலகிற்கு 88,000 கருவிழிப்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதில் பாகிஸ்தானுக்கே அதிகளவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.சுற்றுச்சூழலிலிருந்து ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் `கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே எவருக்கும் ஏற்புடையதாகிவிடும்  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement