4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, கண்டி, நுவரெலியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று பிற்பகல் பெய்த பலத்த மழையின் காரணமாக, கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியிருந்தன.
இதன்காரணமாக போக்குவரத்து நெரிசலும் நிலவியதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக லுணுகலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட 19ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவில், மண்சரிவு அபாயம் காரணமாக 115 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்கள் ஹொப்டன் 19ஆம் கட்டை விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை. மக்களே அவதானம். 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.இதன்படி, பதுளை, கண்டி, நுவரெலியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இன்று பிற்பகல் பெய்த பலத்த மழையின் காரணமாக, கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியிருந்தன.இதன்காரணமாக போக்குவரத்து நெரிசலும் நிலவியதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.இதேவேளை, தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக லுணுகலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட 19ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவில், மண்சரிவு அபாயம் காரணமாக 115 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.அவர்கள் ஹொப்டன் 19ஆம் கட்டை விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.