• May 17 2024

இலங்கை சட்டக்கல்லூரி கடும் நிதி நெருக்கடியில் - மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பு! samugammedia

Tamil nila / Sep 2nd 2023, 7:18 pm
image

Advertisement

திறைசேரியிலிருந்து பணம் ஒதுக்கப்படாததால் சட்டக்கல்லூரி நடத்திச் செல்வதில் பாரிய நெருக்கடிகளுக்கு  முகங்கொடுத்துள்ளதாக சட்டக்கல்லூரியின் அதிபர் கலாநிதி அதுல பத்திநாயக்க தெரிவித்துள்ளார்.

நீதித்துறை, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியுடன் செலவுகள் அதிகரித்துள்ளதால் மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த 23ஆம் திகதி நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

சட்டக்கல்லூரியின் கட்டணத்தை மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் உயர்த்தப்பட்டமைக்கான காரணம் என்னவென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல் பயிற்சி வழக்கறிஞர்களிடம் இருந்து உறுப்பினர் கட்டணத்தை வசூலிக்கும் முன்மொழிவும் இங்கு பரிசீலிக்கப்பட்டது.

மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என குழுவின் தலைவர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

இலங்கை சட்டக்கல்லூரி கடும் நிதி நெருக்கடியில் - மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பு samugammedia திறைசேரியிலிருந்து பணம் ஒதுக்கப்படாததால் சட்டக்கல்லூரி நடத்திச் செல்வதில் பாரிய நெருக்கடிகளுக்கு  முகங்கொடுத்துள்ளதாக சட்டக்கல்லூரியின் அதிபர் கலாநிதி அதுல பத்திநாயக்க தெரிவித்துள்ளார்.நீதித்துறை, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.பொருளாதார நெருக்கடியுடன் செலவுகள் அதிகரித்துள்ளதால் மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த 23ஆம் திகதி நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.சட்டக்கல்லூரியின் கட்டணத்தை மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் உயர்த்தப்பட்டமைக்கான காரணம் என்னவென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல் பயிற்சி வழக்கறிஞர்களிடம் இருந்து உறுப்பினர் கட்டணத்தை வசூலிக்கும் முன்மொழிவும் இங்கு பரிசீலிக்கப்பட்டது.மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என குழுவின் தலைவர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement