• Nov 24 2024

பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம்: 12 ஆக அதிகரித்த ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை

Chithra / Jul 26th 2024, 11:57 am
image


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்கான ஏதுநிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர ஆகியோர் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

மேலும், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கயன மற்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் வஹாராதிபதி தம்மரதன தேரர் ஆகியோரும் களமிறங்குவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.

இதேவேளை வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் மக்கள் சார்பாக பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடவுள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் திகதி இன்றையதினம் வெளியாகிய பின்னர் வேட்பாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம்: 12 ஆக அதிகரித்த ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதற்கான ஏதுநிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர ஆகியோர் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.மேலும், தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கயன மற்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் வஹாராதிபதி தம்மரதன தேரர் ஆகியோரும் களமிறங்குவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.இதேவேளை வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் மக்கள் சார்பாக பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடவுள்ளார்.அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.ஜனாதிபதி தேர்தல் திகதி இன்றையதினம் வெளியாகிய பின்னர் வேட்பாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement