ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்பு குழு கூடிய போது அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.
அதற்குத் தேவையான மனித வளங்களும், தேவையான உபகரணங்களும் தங்களிடம் இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நீண்ட நாட்களாக சமனல ஏரி நீர்த்தேக்கத்தில் நீர் கசிவதை நிறுத்த முடியாமல் உள்ளதாக இலங்கை எரிசக்தி தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் சக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
தொடர் நீர் கசிவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அணுவாயுத தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகும் இலங்கை. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் கதிரியக்க நிலைமைகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்பு குழு கூடிய போது அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.அதற்குத் தேவையான மனித வளங்களும், தேவையான உபகரணங்களும் தங்களிடம் இருப்பதாக அணுசக்தி ஒழுங்குமுறை சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, நீண்ட நாட்களாக சமனல ஏரி நீர்த்தேக்கத்தில் நீர் கசிவதை நிறுத்த முடியாமல் உள்ளதாக இலங்கை எரிசக்தி தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் சக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.தொடர் நீர் கசிவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.