• May 03 2024

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மன்னார் வருகை!

Tamil nila / Jan 12th 2023, 8:29 pm
image

Advertisement

இலங்கை, தமிழரசு கட்சியின் மன்னார் கிளைக்கு இன்று வியாழக்கிழமை மாலை விஜயம் செய்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களுடன் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.



பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.


-குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து ஊடக சந்திப்பு இடம் பெற்றது.


-இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,


இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எங்களின் நிலைப்பாடு,மக்களின் பொறுப்பு தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.இத்தேர்தல் பல அரசியல் அமைப்பு திருத்தங்களோடும் தேர்தல் திருத்தங்களோடு இடம் பெற வேண்டும்.


இத்தேர்தல் ஏறகனவே உள்ள நடைமுறையோடு,மக்கள் மத்தியில் பல குறைபாடுகள்,ஆட்சி நடத்த முடியாத நிலை,வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாத அளவிற்கு ஆளும் தரப்பு,எதிர் தரப்பு என்ற வகையில்,ஆளும் தரப்பில் வெற்றி பெற்றிருந்தது பதவியை பெற்றிருந்தாலும் எதிர் தரப்பில் இருக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இந்த ஆட்சியை நடாத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது.


இதில் இன்னும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என அரசாங்கம் கூறிய போதும் அதற்கான திருத்தங்கள் இன்னும் கொண்டு வரவில்லை.


-தமிழரசுக்கட்சியை பொறுத்தவரையில் ,அவர்களுடைய செயற்குழுவில் பல வகையான கேள்விகள் எழுப்பப்பட்டு, சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டு இறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு முன்னால்  அந்த செயற் குழுவில் வரைந்த மாதிரி ஒரு சிபாரிசை நாங்கள் வரைந்து இருக்கின்றோம்.


ஏற்கனவே பெற்ற பெறுமானங்களின் அடிப்படையில் அதை வைத்து ஆட்சியை நடத்த முடியாத அடிப்படையில் தேசிய கூட்டமைப்பு பல வெற்றிகளை பெற்றிருந்த போதும் அந்த அனுபவங்களை பெற்றிருந்த போதிலும் இப்பொழுது தமிழரசுக்கட்சியின் சிபாரிசு ஒரு புதிய நடைமுறை வெற்றியை பெற்றுக்கொள்வதற்கான, கூடிய ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்கான  ஒரு நடைமுறை பற்றி பிரேரிக்கப்பட்டுள்ளது.


இது பற்றி நாங்கள் தமிழரசுக் கட்சிக்கு வெளியில் நிற்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற புளொட்,ரெலோ கட்சிகளுடன்  தமிழரசுக்கட்சியின் சிபாரிசுக்கு பின்னர் நாங்கள் விவாதித்து இருக்கின்றோம்.என அவர் தெரிவித்தார்.



இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மன்னார் வருகை இலங்கை, தமிழரசு கட்சியின் மன்னார் கிளைக்கு இன்று வியாழக்கிழமை மாலை விஜயம் செய்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களுடன் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.-குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து ஊடக சந்திப்பு இடம் பெற்றது.-இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எங்களின் நிலைப்பாடு,மக்களின் பொறுப்பு தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.இத்தேர்தல் பல அரசியல் அமைப்பு திருத்தங்களோடும் தேர்தல் திருத்தங்களோடு இடம் பெற வேண்டும்.இத்தேர்தல் ஏறகனவே உள்ள நடைமுறையோடு,மக்கள் மத்தியில் பல குறைபாடுகள்,ஆட்சி நடத்த முடியாத நிலை,வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாத அளவிற்கு ஆளும் தரப்பு,எதிர் தரப்பு என்ற வகையில்,ஆளும் தரப்பில் வெற்றி பெற்றிருந்தது பதவியை பெற்றிருந்தாலும் எதிர் தரப்பில் இருக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இந்த ஆட்சியை நடாத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது.இதில் இன்னும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என அரசாங்கம் கூறிய போதும் அதற்கான திருத்தங்கள் இன்னும் கொண்டு வரவில்லை.-தமிழரசுக்கட்சியை பொறுத்தவரையில் ,அவர்களுடைய செயற்குழுவில் பல வகையான கேள்விகள் எழுப்பப்பட்டு, சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டு இறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு முன்னால்  அந்த செயற் குழுவில் வரைந்த மாதிரி ஒரு சிபாரிசை நாங்கள் வரைந்து இருக்கின்றோம்.ஏற்கனவே பெற்ற பெறுமானங்களின் அடிப்படையில் அதை வைத்து ஆட்சியை நடத்த முடியாத அடிப்படையில் தேசிய கூட்டமைப்பு பல வெற்றிகளை பெற்றிருந்த போதும் அந்த அனுபவங்களை பெற்றிருந்த போதிலும் இப்பொழுது தமிழரசுக்கட்சியின் சிபாரிசு ஒரு புதிய நடைமுறை வெற்றியை பெற்றுக்கொள்வதற்கான, கூடிய ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்கான  ஒரு நடைமுறை பற்றி பிரேரிக்கப்பட்டுள்ளது.இது பற்றி நாங்கள் தமிழரசுக் கட்சிக்கு வெளியில் நிற்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற புளொட்,ரெலோ கட்சிகளுடன்  தமிழரசுக்கட்சியின் சிபாரிசுக்கு பின்னர் நாங்கள் விவாதித்து இருக்கின்றோம்.என அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement