• Nov 25 2024

லண்டனில் இடம்பெற்ற சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு இலங்கை அரசு அதிருப்தி..!

Chithra / Feb 7th 2024, 12:48 pm
image

  

பிரித்தானியாவின் லண்டனில் கடந்த 4ஆம் திகதி இலங்கையின் தேசிய சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இராஜதந்திர ரீதியில் இந்தப் போராட்டம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

76ஆம் சுதந்திர தின நிகழ்வுகளை எதிர்த்து தமிழ் புலம்பெயர் தரப்புக்கள் மேற்கொண்ட போராட்டம் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான அதிருப்தி, லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள் மற்றும் கறுப்பு கொடிகளை ஏந்தி சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு லண்டனில் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் இடம்பெற்ற சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு இலங்கை அரசு அதிருப்தி.   பிரித்தானியாவின் லண்டனில் கடந்த 4ஆம் திகதி இலங்கையின் தேசிய சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.இராஜதந்திர ரீதியில் இந்தப் போராட்டம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.76ஆம் சுதந்திர தின நிகழ்வுகளை எதிர்த்து தமிழ் புலம்பெயர் தரப்புக்கள் மேற்கொண்ட போராட்டம் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பிலான அதிருப்தி, லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள் மற்றும் கறுப்பு கொடிகளை ஏந்தி சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு லண்டனில் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement