• Oct 19 2024

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஏழு பதக்கம் வென்ற இலங்கை! samugammedia

Tamil nila / May 12th 2023, 8:01 pm
image

Advertisement

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கையை சேர்ந்த ஏழு வீர, வீராங்கனைகள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

இலங்கை மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற வீர, வீராங்கனைகள் ஐந்து தங்கப்பதக்கங்ளையும் இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

உலக மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் 2023 மே 7,8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பதக்கங்கள் ஊடாக இலங்கை சர்வதேச ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இச்சாதனையை இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து சென்ற வீரர்கள் நிகழ்த்தியுள்ளனர்.



இவர்களின் இச்சாதனையை கௌரவிக்கும் முகமாக வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

சண்முகநாதன் சஞ்சயன் தங்கம், தட்சணாமூர்த்தி மகிஷா தங்கம்,ஜெயவர்த்தன செவுமினி இமேஷா தங்கம், குமார் கிருசாந்தன் வெள்ளி,

முருகன் வினோத் தங்கம்.

சிவகுமார் தர்ணிகா தங்கம்,

ராமநாதன் திவ்யா தங்கம்

ஆகிய வீர, வீராங்கனைகளே நாட்டிற்கும் தமது பிரதேசத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.


சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஏழு பதக்கம் வென்ற இலங்கை samugammedia சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கையை சேர்ந்த ஏழு வீர, வீராங்கனைகள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.இலங்கை மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் தலைவர் எம்.எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற வீர, வீராங்கனைகள் ஐந்து தங்கப்பதக்கங்ளையும் இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.உலக மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஏற்பாட்டில் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் 2023 மே 7,8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பதக்கங்கள் ஊடாக இலங்கை சர்வதேச ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.இச்சாதனையை இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து சென்ற வீரர்கள் நிகழ்த்தியுள்ளனர்.இவர்களின் இச்சாதனையை கௌரவிக்கும் முகமாக வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.சண்முகநாதன் சஞ்சயன் தங்கம், தட்சணாமூர்த்தி மகிஷா தங்கம்,ஜெயவர்த்தன செவுமினி இமேஷா தங்கம், குமார் கிருசாந்தன் வெள்ளி,முருகன் வினோத் தங்கம்.சிவகுமார் தர்ணிகா தங்கம்,ராமநாதன் திவ்யா தங்கம்ஆகிய வீர, வீராங்கனைகளே நாட்டிற்கும் தமது பிரதேசத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement