• Nov 17 2024

புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர் தீயிட்டு உயிர்மாய்ப்பு

Chithra / Aug 29th 2024, 8:19 am
image

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் மெல்போர்னில் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

23 வயதான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பெற்றோருடன் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

தற்காலிக விசாவில் சுமார் 11 வருடங்களாக அந்த நாட்டில் தங்கியிருந்த அவர், முன்னதாக புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.

மனோ யோகலிங்கம் என்ற இளைஞனே விசா பிரச்சினை காரணமாக மிகவும் கவலையடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அவர் தனக்கு தானே தீவைத்து கொண்டதாகவும், 

பின்னர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் விக்டோரியா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி (28) உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர் தீயிட்டு உயிர்மாய்ப்பு புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் மெல்போர்னில் தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.23 வயதான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பெற்றோருடன் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.தற்காலிக விசாவில் சுமார் 11 வருடங்களாக அந்த நாட்டில் தங்கியிருந்த அவர், முன்னதாக புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த போதிலும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது.மனோ யோகலிங்கம் என்ற இளைஞனே விசா பிரச்சினை காரணமாக மிகவும் கவலையடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அவர் தனக்கு தானே தீவைத்து கொண்டதாகவும், பின்னர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் விக்டோரியா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஆனால் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி (28) உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement