• Nov 26 2024

மாலைதீவில் போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கை மீன்பிடி படகு!

Tamil nila / Nov 24th 2024, 6:48 pm
image

மாலத்தீவு கடலோர காவல்படை இலங்கை கடற்படையினரின் உதவியுடன் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கொக்கெய்ன் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி இழுவை படகை கைப்பற்றியுள்ளது.

இலங்கை கடற்படைக்கும் மாலத்தீவு கடலோரக் காவல்படைக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுப் பகிர்வு நடவடிக்கையைத் தொடர்ந்து, 23 நவம்பர் 2024 அன்று மாலைதீவு கடலோரக் காவல்படையினரால் சுமார் 344 கிலோகிராம் படிக மெத்தம்பேட்டமைன் மற்றும் சுமார் 124 கிலோ கொக்கெய்ன் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி இழுவைப்படகு கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்கள், மாலைத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் மாலைத்தீவு கடலோர காவல்படை இணைந்து நடத்திய வெற்றிகரமான புலனாய்வு பரிமாற்றத்தின் விளைவாக நேற்று (23) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவில் போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கை மீன்பிடி படகு மாலத்தீவு கடலோர காவல்படை இலங்கை கடற்படையினரின் உதவியுடன் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கொக்கெய்ன் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி இழுவை படகை கைப்பற்றியுள்ளது.இலங்கை கடற்படைக்கும் மாலத்தீவு கடலோரக் காவல்படைக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுப் பகிர்வு நடவடிக்கையைத் தொடர்ந்து, 23 நவம்பர் 2024 அன்று மாலைதீவு கடலோரக் காவல்படையினரால் சுமார் 344 கிலோகிராம் படிக மெத்தம்பேட்டமைன் மற்றும் சுமார் 124 கிலோ கொக்கெய்ன் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற இலங்கை மீன்பிடி இழுவைப்படகு கைப்பற்றப்பட்டது.சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்கள், மாலைத்தீவு கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.இலங்கை கடற்படை மற்றும் மாலைத்தீவு கடலோர காவல்படை இணைந்து நடத்திய வெற்றிகரமான புலனாய்வு பரிமாற்றத்தின் விளைவாக நேற்று (23) இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement