• Jul 17 2025

2 கோடி பெறுமதியான பொருட்களை இணையத்தில் கொள்வனவு செய்த பாட்டி!

shanuja / Jul 17th 2025, 12:18 pm
image

சீனாவில் வயதான பெண் ஒருவர் 2 கோடி ரூபா பெறுமதிக்கு அதிகமாக பொருட்களை இணையக் கொள்வனவு செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவின் ஜியாடிங் பகுதியைச் சேர்ந்த வாங் என்ற 66 வயதான பாட்டி ஒருவரே இவ்வாறு பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளார். 


தனது பொழுதைக் கழிப்பதற்காக 2.4 கோடிக்கும் அதிகமாக  இணையத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்து வந்துள்ளார். கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களில்  பல பொதிகள் பிரித்துப் பார்க்காமல்  உள்ளன என்று தெரியவந்துள்ளது.


பொழுதைக் கழிப்பதற்காக பல பொருட்களைக் கொள்வனவு செய்து வந்த பாட்டி அவற்றை சேமித்து வைப்பதற்காக வீடொன்றையும் வாங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 


பொழுதைக் கழிப்பதற்காக இவ்வாறு பொருட்களைக் கொள்வனவு செய்து சேமித்து வைக்கும் சம்பவம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. அவர் சேமித்து வைத்த பொருட்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 


இதற்கடையே கொள்வனவு செய்யப்பட்ட பல பிரிக்கப்படாத பொதிகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவு அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

2 கோடி பெறுமதியான பொருட்களை இணையத்தில் கொள்வனவு செய்த பாட்டி சீனாவில் வயதான பெண் ஒருவர் 2 கோடி ரூபா பெறுமதிக்கு அதிகமாக பொருட்களை இணையக் கொள்வனவு செய்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் ஜியாடிங் பகுதியைச் சேர்ந்த வாங் என்ற 66 வயதான பாட்டி ஒருவரே இவ்வாறு பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளார். தனது பொழுதைக் கழிப்பதற்காக 2.4 கோடிக்கும் அதிகமாக  இணையத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்து வந்துள்ளார். கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களில்  பல பொதிகள் பிரித்துப் பார்க்காமல்  உள்ளன என்று தெரியவந்துள்ளது.பொழுதைக் கழிப்பதற்காக பல பொருட்களைக் கொள்வனவு செய்து வந்த பாட்டி அவற்றை சேமித்து வைப்பதற்காக வீடொன்றையும் வாங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. பொழுதைக் கழிப்பதற்காக இவ்வாறு பொருட்களைக் கொள்வனவு செய்து சேமித்து வைக்கும் சம்பவம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. அவர் சேமித்து வைத்த பொருட்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதற்கடையே கொள்வனவு செய்யப்பட்ட பல பிரிக்கப்படாத பொதிகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவு அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement