வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியில் ஆடிப்பிறப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் மாநகரசபையின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சோமசுந்தரபுலவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விபுலாநந்தா கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது.
ஆடிப்பிறப்பு தொடர்பான சிறப்புரைகளை கலாசார உத்தியோகத்தர் சி.கயேந்திரகுமார் மற்றும் ஆசிரியர் வரதன் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்
நிகழ்வில் மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், மாநகர ஆணையாளர் வாகீசன், முச்சக்கரவண்டி உரிமையாளர்சங்க தலைவர் ரவீந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியில் ஆடிப்பிறப்பு நிகழ்வு வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியில் ஆடிப்பிறப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் மாநகரசபையின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சோமசுந்தரபுலவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விபுலாநந்தா கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது.ஆடிப்பிறப்பு தொடர்பான சிறப்புரைகளை கலாசார உத்தியோகத்தர் சி.கயேந்திரகுமார் மற்றும் ஆசிரியர் வரதன் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்நிகழ்வில் மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், மாநகர ஆணையாளர் வாகீசன், முச்சக்கரவண்டி உரிமையாளர்சங்க தலைவர் ரவீந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.