• May 04 2024

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போராட்டத்திற்கு தயார்

Tharun / Apr 11th 2024, 6:12 pm
image

Advertisement

தொழிற்சங்க ரீதியாக சம்பள நிர்ணயச் சபையுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது இணக்கப்பாடு இன்மையால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் அவர்கள் இன்றைய தினம் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான கொழும்பு சௌமிய பவனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

இதன் போது தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் பற்றிய கருத்துக்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நிலைப்பாட்டையும் அறிவித்திருந்தார்

குறித்தவிடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று நடந்த சம்பள பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் தரப்பில் சார்பில் நாங்கள் சென்றோம் அதே சமயம் கம்பனி சார்பாக முதலாளிகள் சமூகமளிக்கவில்லை. பொதுவாக கூட்டு ஒப்பந்த மூலமாகத்தான் சம்பள பேச்சுவார்த்தை இடம்பெற்றது.  


ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் காலங்கள் தாமதமானதால் தொழில் அமைச்சுக்கு  செல்லக்கூடியதாக இருந்தது இன்று தொழிலமைச்சுக்கு  அவர்கள் தொடர்ந்து அதே பாணியில் அவர்கள் செயல்படுகிறார்கள்.  தொழிலை அமைச்சுதான் நடுநிலைமையானது. அதிலும் கம்பனிகள் செயற்படுகிறார்கள் என்பதனால், தொழில் சங்க நடவடிக்கை எடுப்பது தவிர வேறு எந்த வழிகளும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு கிடையாது.எதிர்வரும் காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர் மட்டம் கூடி அடுத்த கட்ட நடவடிக்கையாக தொழில் சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போராட்டத்திற்கு தயார் தொழிற்சங்க ரீதியாக சம்பள நிர்ணயச் சபையுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது இணக்கப்பாடு இன்மையால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் அவர்கள் இன்றைய தினம் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான கொழும்பு சௌமிய பவனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.இதன் போது தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் பற்றிய கருத்துக்களையும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நிலைப்பாட்டையும் அறிவித்திருந்தார்குறித்தவிடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று நடந்த சம்பள பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் தரப்பில் சார்பில் நாங்கள் சென்றோம் அதே சமயம் கம்பனி சார்பாக முதலாளிகள் சமூகமளிக்கவில்லை. பொதுவாக கூட்டு ஒப்பந்த மூலமாகத்தான் சம்பள பேச்சுவார்த்தை இடம்பெற்றது.  ஆனால் கூட்டு ஒப்பந்தத்தில் காலங்கள் தாமதமானதால் தொழில் அமைச்சுக்கு  செல்லக்கூடியதாக இருந்தது இன்று தொழிலமைச்சுக்கு  அவர்கள் தொடர்ந்து அதே பாணியில் அவர்கள் செயல்படுகிறார்கள்.  தொழிலை அமைச்சுதான் நடுநிலைமையானது. அதிலும் கம்பனிகள் செயற்படுகிறார்கள் என்பதனால், தொழில் சங்க நடவடிக்கை எடுப்பது தவிர வேறு எந்த வழிகளும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு கிடையாது.எதிர்வரும் காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர் மட்டம் கூடி அடுத்த கட்ட நடவடிக்கையாக தொழில் சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement