• Nov 24 2024

முச்சக்கரவண்டியை 88 கிலோமீற்றர் பின்னோக்கி செலுத்தி சாதனை படைத்த இலங்கையர்!

Chithra / Aug 9th 2024, 3:54 pm
image

 

புத்தளம் - முந்தல், முக்குத்தொடுவாய் பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் முச்சக்கரவண்டியை 88 கிலோமீற்றர் தூரத்தில் பின்னோக்கி செலுத்தி சாதனை படைத்துள்ளார்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான நிஷாந்த பண்டார என்ற நபரே நேற்றைய தினம் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவர் மூன்று மணித்தியாலங்கள் 48 நிமிடங்கள் 47 வினாடிகளில்,  முச்சக்கரவண்டியை 88 கிலோமீற்றர் தூரத்தில் பின்னோக்கி ஓட்டி சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

நிஷாந்த பண்டார இலங்கை விமானப்படையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் எனவும் தற்போது முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரிவதாகவும்  தெரியவருகின்றது.

செரண்டிகப் உலக சாதனை நிறுவனத்தின் கண்காணிப்பாளரின் முன்னிலையில் நிஷாந்த பண்டார இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

சாதனை படைக்கும் முன் முக்குதொடுவாய் சந்தியில் நடைபெற்ற வைபவத்தில் பல மத தலைவர்கள் நிஷாந்த பண்டாரவை ஆசிர்வதித்தனர். 

அத்துடன் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதய குமாரவின் பணிப்புரையின் பேரில் முந்தல், மதுரங்குளி, நுரைச்சோலை மற்றும் கல்பிட்டி பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் வீதிகளை முறையாக தயார் செய்து நிஷாந்தவின் பணியை வெற்றியடையச் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.

முந்தல், முக்குத்தொடுவாய் கிராமத்திலிருந்து, மதுரங்குளிக்கு வந்து கல்பிட்டி வீதி பாலவி சந்தியில் இருந்து பாலக்குடா சந்திக்கு திரும்பி தலவில தேவாலயத்திற்குச் சென்று மீண்டும் முக்குத்தொடுவாய் திரும்பினார்.

உலக சாதனை படைக்கும் முன் கடந்த பெப்ரவரி மாதம் பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த போட்டியை வெற்றிகரமாக முடித்த பிறகு, உலக சாதனை படைக்க  ஏற்பாடு செய்யப்பட்டது.

உலக சாதனையை நிலைநாட்டிய பின்னர், செரண்டிப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் நிஷாந்தவின் வெற்றி தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் பிற பரிசுகளை வழங்கியது.


முச்சக்கரவண்டியை 88 கிலோமீற்றர் பின்னோக்கி செலுத்தி சாதனை படைத்த இலங்கையர்  புத்தளம் - முந்தல், முக்குத்தொடுவாய் பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் முச்சக்கரவண்டியை 88 கிலோமீற்றர் தூரத்தில் பின்னோக்கி செலுத்தி சாதனை படைத்துள்ளார்.ஐந்து பிள்ளைகளின் தந்தையான நிஷாந்த பண்டார என்ற நபரே நேற்றைய தினம் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.இவர் மூன்று மணித்தியாலங்கள் 48 நிமிடங்கள் 47 வினாடிகளில்,  முச்சக்கரவண்டியை 88 கிலோமீற்றர் தூரத்தில் பின்னோக்கி ஓட்டி சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.நிஷாந்த பண்டார இலங்கை விமானப்படையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் எனவும் தற்போது முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரிவதாகவும்  தெரியவருகின்றது.செரண்டிகப் உலக சாதனை நிறுவனத்தின் கண்காணிப்பாளரின் முன்னிலையில் நிஷாந்த பண்டார இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.சாதனை படைக்கும் முன் முக்குதொடுவாய் சந்தியில் நடைபெற்ற வைபவத்தில் பல மத தலைவர்கள் நிஷாந்த பண்டாரவை ஆசிர்வதித்தனர். அத்துடன் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதய குமாரவின் பணிப்புரையின் பேரில் முந்தல், மதுரங்குளி, நுரைச்சோலை மற்றும் கல்பிட்டி பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் வீதிகளை முறையாக தயார் செய்து நிஷாந்தவின் பணியை வெற்றியடையச் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர்.முந்தல், முக்குத்தொடுவாய் கிராமத்திலிருந்து, மதுரங்குளிக்கு வந்து கல்பிட்டி வீதி பாலவி சந்தியில் இருந்து பாலக்குடா சந்திக்கு திரும்பி தலவில தேவாலயத்திற்குச் சென்று மீண்டும் முக்குத்தொடுவாய் திரும்பினார்.உலக சாதனை படைக்கும் முன் கடந்த பெப்ரவரி மாதம் பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அந்த போட்டியை வெற்றிகரமாக முடித்த பிறகு, உலக சாதனை படைக்க  ஏற்பாடு செய்யப்பட்டது.உலக சாதனையை நிலைநாட்டிய பின்னர், செரண்டிப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் நிஷாந்தவின் வெற்றி தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் பிற பரிசுகளை வழங்கியது.

Advertisement

Advertisement

Advertisement