• Apr 23 2025

மாலைத்தீவில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்!

Chithra / Apr 16th 2025, 12:15 pm
image


மாலைத்தீவில் சாரதியாக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரின் உடலை இன்று காலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

தொடங்கஸ்லந்த - உடு ஹொரம்புவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

15 நாட்களுக்கு முன்பு தனது தங்குமிடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியிக்கு  குறித்த இளைஞன் சென்ற நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

2 நாட்களுக்குப் பிறகு, கடலில் அவரது உடல் மிதப்பதைக் கண்டு மாலைத்தீவு பிரஜை ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த இலங்கை இளைஞன் நீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டதாக மாலைத்தீவு அரசாங்கமும் நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியும் உறுதிப்படுத்தினர்.

அவர் மாலைத்தீவில் சுமார் 3 ஆண்டுகள் பணி புரிந்து, 3 மாதங்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்து மீண்டும் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

மாலைத்தீவில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் மாலைத்தீவில் சாரதியாக பணியாற்றிய இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவரின் உடலை இன்று காலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.தொடங்கஸ்லந்த - உடு ஹொரம்புவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.15 நாட்களுக்கு முன்பு தனது தங்குமிடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியிக்கு  குறித்த இளைஞன் சென்ற நிலையில் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.2 நாட்களுக்குப் பிறகு, கடலில் அவரது உடல் மிதப்பதைக் கண்டு மாலைத்தீவு பிரஜை ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.குறித்த இலங்கை இளைஞன் நீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டதாக மாலைத்தீவு அரசாங்கமும் நீர்கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரியும் உறுதிப்படுத்தினர்.அவர் மாலைத்தீவில் சுமார் 3 ஆண்டுகள் பணி புரிந்து, 3 மாதங்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்து மீண்டும் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement