• Nov 28 2024

இலங்கை சந்தையில் அடுத்த வருடம் மீண்டும் பல பொருட்களின் விலை அதிகரிப்பு! samugammedia

Tamil nila / Dec 3rd 2023, 4:50 pm
image

இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை 72 சதவீதம் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார்.

இதன்படி மறைமுக வரிகள் காரணமாக  2024ஆம் ஆண்டில் பொருட்களின் விலை மற்றும் சேவைகளின் கட்டணங்கள் உள்ளிட்டவை கணிசமான அளவில் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்படி 122, 400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் வற் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும் போது,  ​​வணிகர்கள் வாடிக்கையாளரிடமிருந்து வரியை முழுமையாக வசூலிக்க முயற்சிப்பார்கள். அதன்படி இந்த 72 சதவீத மறைமுக வரி நுகர்வோர் மீது செலுத்தப்படுவது தவிர்க்க முடியாது என அமிந்த மெத்சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

இலங்கை சந்தையில் அடுத்த வருடம் மீண்டும் பல பொருட்களின் விலை அதிகரிப்பு samugammedia இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை 72 சதவீதம் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார்.இதன்படி மறைமுக வரிகள் காரணமாக  2024ஆம் ஆண்டில் பொருட்களின் விலை மற்றும் சேவைகளின் கட்டணங்கள் உள்ளிட்டவை கணிசமான அளவில் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்படி 122, 400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் வற் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும் போது,  ​​வணிகர்கள் வாடிக்கையாளரிடமிருந்து வரியை முழுமையாக வசூலிக்க முயற்சிப்பார்கள். அதன்படி இந்த 72 சதவீத மறைமுக வரி நுகர்வோர் மீது செலுத்தப்படுவது தவிர்க்க முடியாது என அமிந்த மெத்சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement