• Nov 25 2024

உடல் உறுப்பு தானம் செய்து உயிர் காக்குமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை

Chithra / Jan 11th 2024, 10:29 am
image

  

உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

உடல் உறுப்புக்களை தானம் செய்வதனால் பல உயிர்களை பாதுகாக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழக்கும் நோயாளிகளின் அத்தியாவசியமான உடல் பாகங்களை தானம் செய்வதனால் அவற்றை வேறு நபர்களுக்கு பொருத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ளும் விசேட பிரிவொன்று பேராதனை வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நோய் நிலைமைகளினால் உயிரிழப்போரின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு வைத்தியசாலையின் மருத்துவர்கள் கோரியுள்ளனர்.

கல்லீரலைக் கூட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் தற்பொழுது பேராதனை வைத்தியசாலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.   


உடல் உறுப்பு தானம் செய்து உயிர் காக்குமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை   உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.உடல் உறுப்புக்களை தானம் செய்வதனால் பல உயிர்களை பாதுகாக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழக்கும் நோயாளிகளின் அத்தியாவசியமான உடல் பாகங்களை தானம் செய்வதனால் அவற்றை வேறு நபர்களுக்கு பொருத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உறுப்பு மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ளும் விசேட பிரிவொன்று பேராதனை வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டுள்ளது.பல்வேறு நோய் நிலைமைகளினால் உயிரிழப்போரின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வருமாறு வைத்தியசாலையின் மருத்துவர்கள் கோரியுள்ளனர்.கல்லீரலைக் கூட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் தற்பொழுது பேராதனை வைத்தியசாலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.   

Advertisement

Advertisement

Advertisement