எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலி மாநகர சபை மைதானத்தில் இன்று இடம்பெற்ற “ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்” பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஏற்கனவே செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இளைஞர்களுக்கான சிறந்த இலங்கையை உருவாக்க அனைத்து அரசியல்வாதிகளும் அரசியல் பேதங்களை விடுத்து ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய உடன்பாடுகளை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்றும், அந்த வரைவுக்கு முரணாக செல்ல முடியுமென யாராவது கூறினால், அவர்கள் நாட்டை ஆபத்தில் தள்ளிவிடும் பொய்யைச் சொல்கிறார்கள் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி அறிவிப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.காலி மாநகர சபை மைதானத்தில் இன்று இடம்பெற்ற “ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்” பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஏற்கனவே செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.இதேவேளை, இளைஞர்களுக்கான சிறந்த இலங்கையை உருவாக்க அனைத்து அரசியல்வாதிகளும் அரசியல் பேதங்களை விடுத்து ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய உடன்பாடுகளை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்றும், அந்த வரைவுக்கு முரணாக செல்ல முடியுமென யாராவது கூறினால், அவர்கள் நாட்டை ஆபத்தில் தள்ளிவிடும் பொய்யைச் சொல்கிறார்கள் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.