• Oct 29 2024

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இலங்கையர் பாதிப்பு..! samugammedia

Chithra / Oct 8th 2023, 12:48 pm
image

Advertisement

 

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் தாக்குதல்கள் மற்றும் வன்முறை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்து இலங்கை கவலையடைவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதுடன் மேலும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்க அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

இதேவேளை, நாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கும் மோதல்கள் காரணமாக சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

காஸா எல்லையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் குறைந்தது 300 கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனை அறிக்கைகளின் அடிப்படையில், தாக்குதல்களால் 232 பாலஸ்தீனியர்களும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இலங்கையர் பாதிப்பு. samugammedia  இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் தாக்குதல்கள் மற்றும் வன்முறை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்து இலங்கை கவலையடைவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதுடன் மேலும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்க அனைத்து தரப்பினரும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.இதேவேளை, நாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கும் மோதல்கள் காரணமாக சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.காஸா எல்லையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் குறைந்தது 300 கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.மருத்துவமனை அறிக்கைகளின் அடிப்படையில், தாக்குதல்களால் 232 பாலஸ்தீனியர்களும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement