• May 03 2024

கோடிக்கணக்கில் தங்கத்தை அடகு வைக்கும் இலங்கை மக்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia

Chithra / Sep 27th 2023, 12:57 pm
image

Advertisement

 

நாட்டு மக்கள் இவ்வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதிக்குள் 19,000 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை அடகு வைத்துள்ளதாக தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சமீபத்திய ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 11 இலட்சம் குடும்பங்கள் தமது வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அனைத்து நாட்டு மக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு ஓரளவு நிவாரணம் பெறுவதற்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் அவ்வாறு வழங்காவிட்டால் மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார். 

கோடிக்கணக்கில் தங்கத்தை அடகு வைக்கும் இலங்கை மக்கள் வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia  நாட்டு மக்கள் இவ்வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதிக்குள் 19,000 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை அடகு வைத்துள்ளதாக தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.சமீபத்திய ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் 11 இலட்சம் குடும்பங்கள் தமது வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.அனைத்து நாட்டு மக்களும் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு ஓரளவு நிவாரணம் பெறுவதற்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அரசாங்கம் அவ்வாறு வழங்காவிட்டால் மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement