• Sep 20 2024

தங்களின் உரிமைக்காகக்கூட குரல் கொடுக்க முடியாத நிலையில் இலங்கையர்கள்..!

Chithra / Dec 10th 2022, 3:32 pm
image

Advertisement

மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பது என்பதே இந்த வருடத்திற்கான எமது கருப்பொருளாக இருக்கிறது. அங்கவினர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பம், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்ட துறை மக்கள் போன்றவர்கள் அவர்களின் உரிமைக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின், யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட "அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி" என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தினமானது இன்றையதினம் யாழில் உள்ள கியூடெக்கில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச மனித உரிமை தினம் இன்று. எனக்கும் ஒரு குரல் இருக்கிறது. அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம், நீதி என்பது அவசியம் என்ற தலைப்பிலே நாங்கள் நினைவு கூறுகின்றோம். 

இந்த மனித உரிமை தினத்தின் உடைய முக்கியத்துவம் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி  ஐக்கிய நாடுகள் சபையினுடைய பொதுச் சபையிலே ஒரு முக்கியமான ஆவணம் நிறைவேற்றப்பட்டது. 

அதாவது, அனைத்து உலக மனித உரிமை பிரகடனம். இந்த ஆவணம் இன்று 75 வருடங்களாக நிலைத்திருக்கக் கூடிய ஒரு ஆவணமாக இருப்பதற்கு அடிப்படை காரணம், இந்த உலகத்தில் வாழ்கின்ற சகல மனித உயிர்களுடைய உரிமைகளை அங்கீகரித்த ஆவணமாக பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக சகல மக்களை ஒன்றிணைப்பது மனித உரிமை. எனவே சகல உயிரினங்களும் சமமானவை என்ற அடிப்படையில் அந்த உரிமைகளே அங்கீகரித்த ஆவணமாக பார்க்கப்படுகிறது.

இந்த வருடத்திற்கான தொனிப்பொருள் எனக்கும் ஒரு குரல் இருக்கிறது. அனைவருக்கும் இந்த கௌரவம், சுதந்திரம், நீதி என்பது முக்கியமானதாகும். ஒதுக்கப்பட்ட சமூகமானது அவர்களது உரிமைகளை பெற்றுக் கொள்வதில் அவர்களுக்கு பல சவால்கள் இருக்கிறது. 

குறிப்பாக அங்கவினர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பம், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்ட துறை மக்கள் போன்றவர்கள் அவர்களின் உரிமைக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. 

எனவே அரசுடன், சிவில் சமூகமும் அனைத்தும் இணைந்து இந்த ஒதுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பது என்பதை இந்த வருடத்திற்கான எமது கருப்பொருளாக இருக்கிறது.-என்றார்.

தங்களின் உரிமைக்காகக்கூட குரல் கொடுக்க முடியாத நிலையில் இலங்கையர்கள். மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பது என்பதே இந்த வருடத்திற்கான எமது கருப்பொருளாக இருக்கிறது. அங்கவினர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பம், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்ட துறை மக்கள் போன்றவர்கள் அவர்களின் உரிமைக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின், யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட "அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம் மற்றும் நீதி" என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் தினமானது இன்றையதினம் யாழில் உள்ள கியூடெக்கில் இடம்பெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,சர்வதேச மனித உரிமை தினம் இன்று. எனக்கும் ஒரு குரல் இருக்கிறது. அனைவருக்கும் கௌரவம், சுதந்திரம், நீதி என்பது அவசியம் என்ற தலைப்பிலே நாங்கள் நினைவு கூறுகின்றோம். இந்த மனித உரிமை தினத்தின் உடைய முக்கியத்துவம் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி  ஐக்கிய நாடுகள் சபையினுடைய பொதுச் சபையிலே ஒரு முக்கியமான ஆவணம் நிறைவேற்றப்பட்டது. அதாவது, அனைத்து உலக மனித உரிமை பிரகடனம். இந்த ஆவணம் இன்று 75 வருடங்களாக நிலைத்திருக்கக் கூடிய ஒரு ஆவணமாக இருப்பதற்கு அடிப்படை காரணம், இந்த உலகத்தில் வாழ்கின்ற சகல மனித உயிர்களுடைய உரிமைகளை அங்கீகரித்த ஆவணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சகல மக்களை ஒன்றிணைப்பது மனித உரிமை. எனவே சகல உயிரினங்களும் சமமானவை என்ற அடிப்படையில் அந்த உரிமைகளே அங்கீகரித்த ஆவணமாக பார்க்கப்படுகிறது.இந்த வருடத்திற்கான தொனிப்பொருள் எனக்கும் ஒரு குரல் இருக்கிறது. அனைவருக்கும் இந்த கௌரவம், சுதந்திரம், நீதி என்பது முக்கியமானதாகும். ஒதுக்கப்பட்ட சமூகமானது அவர்களது உரிமைகளை பெற்றுக் கொள்வதில் அவர்களுக்கு பல சவால்கள் இருக்கிறது. குறிப்பாக அங்கவினர்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பம், யுத்தத்திலே பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் மற்றும் பெருந்தோட்ட துறை மக்கள் போன்றவர்கள் அவர்களின் உரிமைக்காக அவர்களால் கூட குரல் கொடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. எனவே அரசுடன், சிவில் சமூகமும் அனைத்தும் இணைந்து இந்த ஒதுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பது என்பதை இந்த வருடத்திற்கான எமது கருப்பொருளாக இருக்கிறது.-என்றார்.

Advertisement

Advertisement

Advertisement