• Jan 11 2025

இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்!

Chithra / Dec 15th 2024, 1:29 pm
image

 

இஸ்ரேலுக்கு சென்றிருந்த 17 இலங்கையர்கள், அவர்களது வேலை ஒப்பந்தங்களை மீறிய நிலையில், நாடு கடத்தப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடு கடத்தப்படுபவர்கள், விவசாய வேலைகளுக்கான விசாக்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.

எனினும் அவர்கள் நியமிக்கப்பட்ட பணியிடங்களை விட்டு வெளியேறி, வெதுப்பகங்களில் பணிபுரிந்தனர்.

இந்நிலையில் இஸ்ரேலிய அதிகாரிகள் ஆய்வுகளின் போது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதுடன், நாடு கடத்தப்படவுள்ளனர்.

இஸ்ரேலை பொறுத்த வரையில், வெளிநாட்டு தொழிலாளர் நடைமுறைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

அத்துடன், வெளிநாட்டு பணியாளர்கள் அவர்களது அசல் விசா ஒப்பந்தங்களில் குறிப்பிடப்படாத வேலை வகைகளுக்கு மாறுவதை கண்டிப்பாக தடை செய்கிறது என்று இலங்கை தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்கள்  இஸ்ரேலுக்கு சென்றிருந்த 17 இலங்கையர்கள், அவர்களது வேலை ஒப்பந்தங்களை மீறிய நிலையில், நாடு கடத்தப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.நாடு கடத்தப்படுபவர்கள், விவசாய வேலைகளுக்கான விசாக்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.எனினும் அவர்கள் நியமிக்கப்பட்ட பணியிடங்களை விட்டு வெளியேறி, வெதுப்பகங்களில் பணிபுரிந்தனர்.இந்நிலையில் இஸ்ரேலிய அதிகாரிகள் ஆய்வுகளின் போது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதுடன், நாடு கடத்தப்படவுள்ளனர்.இஸ்ரேலை பொறுத்த வரையில், வெளிநாட்டு தொழிலாளர் நடைமுறைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.அத்துடன், வெளிநாட்டு பணியாளர்கள் அவர்களது அசல் விசா ஒப்பந்தங்களில் குறிப்பிடப்படாத வேலை வகைகளுக்கு மாறுவதை கண்டிப்பாக தடை செய்கிறது என்று இலங்கை தூதுவர் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement