• Nov 28 2024

ஜேர்மனியில் வேலை வாய்ப்பு எனக் கூறி மோசடி - இலட்சக்கணக்கில் ஏமாந்த இலங்கையர்!

Chithra / Aug 20th 2024, 1:25 pm
image

 

ஜேர்மனியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மாவட்ட நீதிபதி மற்றும் சட்டத்தரணி என்ற போர்வையில் ஜேர்மனியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து 24 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் காணப்படுவதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜேர்மனியில் வேலை வாய்ப்பு எனக் கூறி மோசடி - இலட்சக்கணக்கில் ஏமாந்த இலங்கையர்  ஜேர்மனியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்தனர்.கந்தர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மாவட்ட நீதிபதி மற்றும் சட்டத்தரணி என்ற போர்வையில் ஜேர்மனியில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து 24 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சந்தேக நபருக்கு எதிராக வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் மூன்று முறைப்பாடுகள் காணப்படுவதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement