தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடைகளைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கடந்த வருடத்தை விடவும் இந்த வருடத்தில் பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியாவில் வியாபாரம் களை கட்டியுள்ளது,
நகரில் அதிக சனநெரிசல்களையும் அவதானிக்க முடிந்தததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு தமிழ் - சிங்களப் புத்தாண்டானது எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படும் நிலையில் வவுனியா நகருக்கு அதிகளவிலானது மக்கள் வருகை தந்து புத்தாடைகள், வெடிகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.
கடந்த வருடத்தை விட இம் முறை புத்தாண்டு வியாபாரம் களை கட்டியுள்ளது,
மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆர்வத்துடன் தயாராகி வருவதையும் அவதானிக்க முடிந்தது.
தமிழ் - சிங்கள புத்தாண்டை கொண்டாட தயாராகும் இலங்கை மக்கள்; களைகட்டும் வியாபாரம் தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடைகளைக் கொள்வனவு செய்வதில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், கடந்த வருடத்தை விடவும் இந்த வருடத்தில் பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்இந்நிலையில் தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியாவில் வியாபாரம் களை கட்டியுள்ளது, நகரில் அதிக சனநெரிசல்களையும் அவதானிக்க முடிந்தததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு தமிழ் - சிங்களப் புத்தாண்டானது எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படும் நிலையில் வவுனியா நகருக்கு அதிகளவிலானது மக்கள் வருகை தந்து புத்தாடைகள், வெடிகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.கடந்த வருடத்தை விட இம் முறை புத்தாண்டு வியாபாரம் களை கட்டியுள்ளது, மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஆர்வத்துடன் தயாராகி வருவதையும் அவதானிக்க முடிந்தது.