• Nov 24 2024

ஓமானில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

Tamil nila / Jul 16th 2024, 8:55 pm
image

ஓமான் தலைநகர் மஸ்கட்டில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

 ஓமானின் அல் -வாடி அல் -கபீர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் இன்று (16) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பாகிஸ்தான் பிரஜைகள் பலியானதுடன் பலர் காயமடைந்தனர். 

 இந்தப் பகுதியில் அதிகளவான இலங்கையர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

 இந்த நிலையில் அங்கு மோதல் நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் அங்குள்ள இலங்கையர்களை குறித்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

 அத்துடன் அங்குள்ள இலங்கையர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லையாயின், ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் 24 69 78 410 என்ற இலக்கத்திற்கோ அல்லது ஓமான் காவல்துறையினரின் 24 52 1885 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

ஓமானில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல் ஓமான் தலைநகர் மஸ்கட்டில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.  ஓமானின் அல் -வாடி அல் -கபீர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகில் இன்று (16) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பாகிஸ்தான் பிரஜைகள் பலியானதுடன் பலர் காயமடைந்தனர்.  இந்தப் பகுதியில் அதிகளவான இலங்கையர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்த நிலையில் அங்கு மோதல் நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் அங்குள்ள இலங்கையர்களை குறித்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.  அத்துடன் அங்குள்ள இலங்கையர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லையாயின், ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் 24 69 78 410 என்ற இலக்கத்திற்கோ அல்லது ஓமான் காவல்துறையினரின் 24 52 1885 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement