• Oct 18 2024

இலங்கையின் காற்று தரச் சுட்டெண்ணில் திடீர் திருப்பம்!

Chithra / Dec 11th 2022, 9:38 am
image

Advertisement

இலங்கையில் காற்றின் தரச் சுட்டெண் நேற்று (10) காலையுடன் ஒப்பிடுகையில் இன்று (11) காலை வேளையில் நல்லதொரு போக்கைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் இணையத்தளத்தின் தகவல்படி, கடுமையான சுகாதார அபாயமுள்ள பகுதியாக மன்னார் நகரப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று பிற்பகல் 53 என மதிப்பிடப்பட்ட மன்னாரின் காற்று தரச் சுட்டெண் தற்போது 59 ஆக உயர்ந்துள்ளது.

கேகாலை மாவட்டத்தின் காற்று தரச் சுட்டெண் 22 ஆகவும், கொழும்பு மாவட்டத்தின் தரச் சுட்டெண் 42 ஆகவும் உள்ளது.

எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தின் காற்று தரச் சுட்டெண் 44 என்ற அளவைக் காட்டுகிறது, அது சாதாரண நிலைமையாகவே கருதப்படுகின்றது.


இலங்கையின் காற்று தரச் சுட்டெண்ணில் திடீர் திருப்பம் இலங்கையில் காற்றின் தரச் சுட்டெண் நேற்று (10) காலையுடன் ஒப்பிடுகையில் இன்று (11) காலை வேளையில் நல்லதொரு போக்கைக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் இணையத்தளத்தின் தகவல்படி, கடுமையான சுகாதார அபாயமுள்ள பகுதியாக மன்னார் நகரப்பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நேற்று பிற்பகல் 53 என மதிப்பிடப்பட்ட மன்னாரின் காற்று தரச் சுட்டெண் தற்போது 59 ஆக உயர்ந்துள்ளது.கேகாலை மாவட்டத்தின் காற்று தரச் சுட்டெண் 22 ஆகவும், கொழும்பு மாவட்டத்தின் தரச் சுட்டெண் 42 ஆகவும் உள்ளது.எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தின் காற்று தரச் சுட்டெண் 44 என்ற அளவைக் காட்டுகிறது, அது சாதாரண நிலைமையாகவே கருதப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement