• Oct 05 2024

நெதர்லாந்து நாட்டுக்கான இலங்கை தூதுவர்- கிழக்கு ஆளுனருடன் விஷேட கலந்துரையாடல்!

Tamil nila / Feb 10th 2023, 9:30 pm
image

Advertisement

நெதர்லாந்து தூதுவர் கிழக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.


நெதர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் HE Bonnie Harbach மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (10)  திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 


இங்கு, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் தூதுவர் கேட்டறிந்தார்.



கிழக்கு மாகாணம் இயற்கை வளங்கள் நிறைந்த மாகாணம் எனவும் அதில் முதலீடு செய்ய வாய்ப்புகள் அதிகம் எனவும் அங்கு சுட்டிக்காட்டிய ஆளுநர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புராதன கட்டிட வளாகத்தில் புதிய வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் கேட்டறிந்தார். 


இதன் போது, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜே.ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நெதர்லாந்து நாட்டுக்கான இலங்கை தூதுவர்- கிழக்கு ஆளுனருடன் விஷேட கலந்துரையாடல் நெதர்லாந்து தூதுவர் கிழக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.நெதர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் HE Bonnie Harbach மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (10)  திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இங்கு, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் தூதுவர் கேட்டறிந்தார்.கிழக்கு மாகாணம் இயற்கை வளங்கள் நிறைந்த மாகாணம் எனவும் அதில் முதலீடு செய்ய வாய்ப்புகள் அதிகம் எனவும் அங்கு சுட்டிக்காட்டிய ஆளுநர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புராதன கட்டிட வளாகத்தில் புதிய வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் கேட்டறிந்தார். இதன் போது, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜே.ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement