• Nov 26 2024

ஜெனீவா அமர்வில் எழக்கூடிய சவால்களை முறியடிக்க இலங்கை இராஜதந்திர முயற்சி..! பேச்சுவார்த்தையில் ரணில்

Chithra / Jan 17th 2024, 1:37 pm
image

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வதற்காக  இலங்கை புதிய இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் உட்பட  பல நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் எழக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய அணுகுமுறைகளை இலங்கை பின்பற்ற ஆரம்பித்துள்ளது.

அணிசேரா மாநாட்டிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகன்டா செல்லவுள்ளார், 

19வது அணிசேரா மாநாட்டிற்காக 120 நாடுகளின் தலைவர்கள் உகன்டாவில் கூடியுள்ளனர்.

மார்ச் மாத அமர்வில் இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆராயவுள்ளது.

இலங்கை தொடர்பாக பொறுப்புக்கூறும் திட்டத்தினை முன்வைத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதி தீர்மானத்தை இலங்கை நிராகரித்துள்ளது.

இலங்கை தொடர்பான தீர்மானத்தினை முன்வைக்கும் நாடுகளில் பிரதானமானதான பிரிட்டனுடன் இலங்கை ஜெனீவா அமர்வு  குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


ஜெனீவா அமர்வில் எழக்கூடிய சவால்களை முறியடிக்க இலங்கை இராஜதந்திர முயற்சி. பேச்சுவார்த்தையில் ரணில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வதற்காக  இலங்கை புதிய இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் உட்பட  பல நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதன் மூலம்,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் எதிர்வரும் அமர்வில் எழக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான புதிய அணுகுமுறைகளை இலங்கை பின்பற்ற ஆரம்பித்துள்ளது.அணிசேரா மாநாட்டிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகன்டா செல்லவுள்ளார், 19வது அணிசேரா மாநாட்டிற்காக 120 நாடுகளின் தலைவர்கள் உகன்டாவில் கூடியுள்ளனர்.மார்ச் மாத அமர்வில் இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆராயவுள்ளது.இலங்கை தொடர்பாக பொறுப்புக்கூறும் திட்டத்தினை முன்வைத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதி தீர்மானத்தை இலங்கை நிராகரித்துள்ளது.இலங்கை தொடர்பான தீர்மானத்தினை முன்வைக்கும் நாடுகளில் பிரதானமானதான பிரிட்டனுடன் இலங்கை ஜெனீவா அமர்வு  குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement