• Nov 28 2024

மீண்டும் திறக்கப்படும் இலங்கையின் மிக உயரமான மலைத் தொடர்..!

Chithra / Feb 14th 2024, 8:36 am
image

  

இலங்கையின் மிக உயரமான மலைத் தொடரான பீதுருதாலகால மலைத் தொடரை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள குறித்த மலைத் தொடர் நாட்டில் மிக உயரமான மற்றும் பூஜ்ஜிய வெப்பநிலையை கொண்ட பகுதியாகும்.

இந்தநிலையில் அது சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட வேண்டும்.

பீதுருதாலகால மலைப் பிரதேசமானது கல்வி மற்றும் சுற்றுலாத்துறையில் உயர் மதிப்பைக் கொண்டுள்ளதுடன், 

அதனை தொடர்ந்தும் மக்களுக்கு தடைசெய்யப்பட்ட பிரதேசமாக பராமரிப்பது பொருத்தமற்றது எனவும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.

மீண்டும் திறக்கப்படும் இலங்கையின் மிக உயரமான மலைத் தொடர்.   இலங்கையின் மிக உயரமான மலைத் தொடரான பீதுருதாலகால மலைத் தொடரை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் இடம்பெற்ற நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.நுவரெலியா மாவட்டத்தில் உள்ள குறித்த மலைத் தொடர் நாட்டில் மிக உயரமான மற்றும் பூஜ்ஜிய வெப்பநிலையை கொண்ட பகுதியாகும்.இந்தநிலையில் அது சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட வேண்டும்.பீதுருதாலகால மலைப் பிரதேசமானது கல்வி மற்றும் சுற்றுலாத்துறையில் உயர் மதிப்பைக் கொண்டுள்ளதுடன், அதனை தொடர்ந்தும் மக்களுக்கு தடைசெய்யப்பட்ட பிரதேசமாக பராமரிப்பது பொருத்தமற்றது எனவும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement