• Dec 14 2024

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை மோசமான சாதனை!

Tamil nila / Nov 28th 2024, 9:07 pm
image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக 42 ஓட்டங்களுக்குச் சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. 

 தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது. 

 அந்தவகையில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

 இந்நிலையில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 13 ஓவர் 5 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 42 ஓட்டங்களை எடுத்திருந்தது. 

 அதன்படி, தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை விட 149 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. 

 டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

 இதேவேளை இலங்கை அணி 1994ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையே இதுவரைக்குமான இலங்கை அணியின் குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.


டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை மோசமான சாதனை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக 42 ஓட்டங்களுக்குச் சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.  தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது.  அந்தவகையில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.  இந்நிலையில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 13 ஓவர் 5 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 42 ஓட்டங்களை எடுத்திருந்தது.  அதன்படி, தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை விட 149 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.  டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இதேவேளை இலங்கை அணி 1994ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையே இதுவரைக்குமான இலங்கை அணியின் குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement