தாய்லாந்திற்கு விஜயம் செய்த இலங்கையர்கள் குழுவொன்று நாடு திரும்ப முடியாமல் தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் தங்கியுள்ளனர் என தெரியவருகின்றது.
சுற்றுலா பயணிகள் குழுவை இலங்கைக்கு அழைத்து வரவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டமையே இதற்கு காரணம் என தெரியவருகின்றது.
ஊடகத்திடம் பேசிய சுற்றுலாப் பயணிகள் குழுவில் இருந்த இலங்கைப் பெண் ஒருவர்,
இந்த நாட்டிற்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் பிற்பகல் 01:55க்கு சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் அந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கை சுற்றுலா பயணிகள் குழு மீண்டும் பேங்கொக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.
இன்று காலை அவர்கள் மீண்டும் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும்,
அந்த விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 01:10க்கு கட்டுநாயக்கவிற்கு செல்லவிருந்த விமானமும் தாமதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் திடீரென இரத்து செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம். பயணிகள் விசனம் தாய்லாந்திற்கு விஜயம் செய்த இலங்கையர்கள் குழுவொன்று நாடு திரும்ப முடியாமல் தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் தங்கியுள்ளனர் என தெரியவருகின்றது.சுற்றுலா பயணிகள் குழுவை இலங்கைக்கு அழைத்து வரவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டமையே இதற்கு காரணம் என தெரியவருகின்றது.ஊடகத்திடம் பேசிய சுற்றுலாப் பயணிகள் குழுவில் இருந்த இலங்கைப் பெண் ஒருவர், இந்த நாட்டிற்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் பிற்பகல் 01:55க்கு சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டதாக தெரிவித்தார்.ஆனால் அந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கை சுற்றுலா பயணிகள் குழு மீண்டும் பேங்கொக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.இன்று காலை அவர்கள் மீண்டும் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், அந்த விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 01:10க்கு கட்டுநாயக்கவிற்கு செல்லவிருந்த விமானமும் தாமதமாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.