• Nov 23 2024

இராஜாங்க அமைச்சரிடமிருந்து அரச தொலைக்காட்சிக்கு 9 இலட்சம் ரூபா கடன்..! வெளியான தகவல்

Chithra / Mar 14th 2024, 12:42 pm
image


 

நவகமுவ பெரஹரவின் நேரடி ஒலிபரப்புக்காக இலங்கை  ரூபவாஹினி   கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட வேண்டிய 9 இலட்சம் ரூபாவை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே செலுத்தத் தவறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற  நவகமு பிரதேச விஹாரை ஒன்றின் 188 ஆவது ரந்தோலி பெரஹராவை நேரடியாக ஒளிபரப்புவதற்காக இந்தத் தொகை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.   

டயானா கமகேவின் வேண்டுகோளுக்கிணங்க ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் நவகமுவ பெரஹராவை  நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.

இந்நிலையில், குறித்த நிலுவைத் தொகை தொடர்பில் ரூபவாஹினி கூடடுத்தாபன   கணக்காளர்  இராஜாங்க அமைச்சரிடம் பலமுறை நினைவூட்டியும் இதுவரை குறித்த  தொகை வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இராஜாங்க அமைச்சரிடமிருந்து அரச தொலைக்காட்சிக்கு 9 இலட்சம் ரூபா கடன். வெளியான தகவல்  நவகமுவ பெரஹரவின் நேரடி ஒலிபரப்புக்காக இலங்கை  ரூபவாஹினி   கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட வேண்டிய 9 இலட்சம் ரூபாவை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே செலுத்தத் தவறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற  நவகமு பிரதேச விஹாரை ஒன்றின் 188 ஆவது ரந்தோலி பெரஹராவை நேரடியாக ஒளிபரப்புவதற்காக இந்தத் தொகை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.   டயானா கமகேவின் வேண்டுகோளுக்கிணங்க ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் நவகமுவ பெரஹராவை  நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.இந்நிலையில், குறித்த நிலுவைத் தொகை தொடர்பில் ரூபவாஹினி கூடடுத்தாபன   கணக்காளர்  இராஜாங்க அமைச்சரிடம் பலமுறை நினைவூட்டியும் இதுவரை குறித்த  தொகை வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement