• Aug 14 2025

திருகோணமலையில் திருடப்பட்ட மாடுகள் மீட்பு!

Thansita / Aug 14th 2025, 5:56 pm
image

திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் 7 மாடுகள் பொலிசாரினால் இன்று  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சேருவில ஸ்ரீமங்களபுர பகுதியில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த பாரதிபுரம், மேன்கமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பண்ணையாளர்களின் 27 எருமை மாடுகள் கடந்த ஒரு வாரத்திற்கு காணாமல் போயிருந்தன.

இவற்றில் இரண்டு வயதான 7 மாடுகள் காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரினால் இன்று  மீட்கப்பட்டிருந்தன. இருப்பினும் குறித்த கடத்தல்களில் ஈடுபட்ட நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் குறித்த திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த மாடுகளில் பண்ணையாளர்களினால் இடப்பட்டிருந்த அடையாளங்கள் சிதைக்கப்பட்டும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டும் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.


தெகிவத்தை, பாரதிபுரம், மேன்காமம், கங்குவேலி, லிங்கபுரம், இரண்டாம்குளனி, கிளிவெட்டி, தங்கநகர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரைக்காக காணிகள் ஒதுக்கப்படாத நிலையிலும், ஆரம்ப காலத்தில் மேய்ச்சல் தரையாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளை வனவள பாதுகாப்பு திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாலும் தமது கால்நடைகளை சேருவில ஸ்ரீமங்களபுர காட்டுப் பகுதியில் வைத்து பல சிரமங்களுக்கு மத்தியில் பராமரித்து வருகின்றார்கள். 

குறித்த பகுதியில் இருந்து மாடுகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மற்றும் வன வள பாதுகாப்பு திணைக்களங்களில் எல்லைக்குள் செல்கின்றபோது தண்டப்பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அத்துடன்

சில திருட்டுக் கும்பலினால் தொடர்ச்சியாக திருடப்பட்டு வருவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் அபிவிருத்திக்காக கால்நடை உற்பத்திகளை அதிகரிக்குமாறு அரசு கூறிவருகின்றபோதும் கால்நடைகளை பராமரிப்பதற்கான மேய்ச்சல் தரைகள் இன்னும் வழங்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.



திருகோணமலையில் திருடப்பட்ட மாடுகள் மீட்பு திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் 7 மாடுகள் பொலிசாரினால் இன்று  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சேருவில ஸ்ரீமங்களபுர பகுதியில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த பாரதிபுரம், மேன்கமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பண்ணையாளர்களின் 27 எருமை மாடுகள் கடந்த ஒரு வாரத்திற்கு காணாமல் போயிருந்தன. இவற்றில் இரண்டு வயதான 7 மாடுகள் காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரினால் இன்று  மீட்கப்பட்டிருந்தன. இருப்பினும் குறித்த கடத்தல்களில் ஈடுபட்ட நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் குறித்த திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். குறித்த மாடுகளில் பண்ணையாளர்களினால் இடப்பட்டிருந்த அடையாளங்கள் சிதைக்கப்பட்டும் மாற்றம் மேற்கொள்ளப்பட்டும் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.தெகிவத்தை, பாரதிபுரம், மேன்காமம், கங்குவேலி, லிங்கபுரம், இரண்டாம்குளனி, கிளிவெட்டி, தங்கநகர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரைக்காக காணிகள் ஒதுக்கப்படாத நிலையிலும், ஆரம்ப காலத்தில் மேய்ச்சல் தரையாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளை வனவள பாதுகாப்பு திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாலும் தமது கால்நடைகளை சேருவில ஸ்ரீமங்களபுர காட்டுப் பகுதியில் வைத்து பல சிரமங்களுக்கு மத்தியில் பராமரித்து வருகின்றார்கள். குறித்த பகுதியில் இருந்து மாடுகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மற்றும் வன வள பாதுகாப்பு திணைக்களங்களில் எல்லைக்குள் செல்கின்றபோது தண்டப்பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அத்துடன்சில திருட்டுக் கும்பலினால் தொடர்ச்சியாக திருடப்பட்டு வருவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.நாட்டின் அபிவிருத்திக்காக கால்நடை உற்பத்திகளை அதிகரிக்குமாறு அரசு கூறிவருகின்றபோதும் கால்நடைகளை பராமரிப்பதற்கான மேய்ச்சல் தரைகள் இன்னும் வழங்கப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement