• Dec 04 2024

கற்கோவளம் உணவு பிரச்சினை; கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை!

Chithra / Dec 4th 2024, 1:13 pm
image


யாழ்ப்பாணம், வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட இரண்டு குடும்பஸ்தர்களுக்கும் இன்று பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வழக்கிற்கு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலமையிலான சட்டத்தரணிகள் மன்றிற்கு  முன்வைத்த  விவாதத்தின் அடிப்படையில் குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

கடந்த 30ம் திகதி கற்கோவளம் பகுதியில் கிராம சேவகரிடம் பிள்ளைகளுக்காக உணவு கோரியவேளை ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த கிராமசேவகர் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே குறித்த வழக்கு இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

கற்கோவளம் உணவு பிரச்சினை; கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை யாழ்ப்பாணம், வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட இரண்டு குடும்பஸ்தர்களுக்கும் இன்று பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் குறித்த வழக்கிற்கு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலமையிலான சட்டத்தரணிகள் மன்றிற்கு  முன்வைத்த  விவாதத்தின் அடிப்படையில் குறித்த இரண்டு சந்தேக நபர்களுக்கும் பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.கடந்த 30ம் திகதி கற்கோவளம் பகுதியில் கிராம சேவகரிடம் பிள்ளைகளுக்காக உணவு கோரியவேளை ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே குறித்த கிராமசேவகர் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே குறித்த வழக்கு இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement