பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகாமைக்கான கூடுதல் நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக ஜப்பான் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்திருந்தன.
ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகாமைக்கான கூடுதல் நிதி உதவியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஐ.நா நிவாரணம் மற்றும் பணிகள் கழகத்தின்(UNRWA) பணியாளர்கள் ஈடுபட்டதால் இந்த நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் நிதியை நிறுத்தின. இதன் தொடர்ச்சியாக தற்போது ஜப்பானும் நிதியை நிறுத்தியுள்ளது. இதனால் பலஸ்தீன அகதிகளுக்கு போதிய உணவு கிடைக்காத சூழல் உருவாகலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
மேற்கு நாடுகளின் இந்த முடிவுக்கு பலஸ்தீனம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஐநா பொதுச் செயலாளரும், மேற்கு நாடுகளின் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண நிதி நிறுத்தம் - ஐக்கிய நாடுகள் சபையின் அதிரடி முடிவு.samugammedia பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகாமைக்கான கூடுதல் நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக ஜப்பான் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த நிதியை நிறுத்துவதாக அறிவித்திருந்தன.ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகாமைக்கான கூடுதல் நிதி உதவியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஐ.நா நிவாரணம் மற்றும் பணிகள் கழகத்தின்(UNRWA) பணியாளர்கள் ஈடுபட்டதால் இந்த நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் நிதியை நிறுத்தின. இதன் தொடர்ச்சியாக தற்போது ஜப்பானும் நிதியை நிறுத்தியுள்ளது. இதனால் பலஸ்தீன அகதிகளுக்கு போதிய உணவு கிடைக்காத சூழல் உருவாகலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.மேற்கு நாடுகளின் இந்த முடிவுக்கு பலஸ்தீனம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஐநா பொதுச் செயலாளரும், மேற்கு நாடுகளின் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.