• Jul 28 2025

தெரு நாய்கள் தொல்லை தீவிரம்: கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி!

Thansita / Jul 27th 2025, 12:39 pm
image

தமிழகத்தில் தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோய்வாய்ப்பட்ட நிலையில் சுற்றித் திரியும் நாய்களை கருணைக்கொலை செய்யலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதனுடன், அந்த நாய்களின் உடல்களை உரிய முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தெரு நாய்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த மாதங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாய் கடி தாக்கத்தால் பலர் அவதியுற்றுள்ளனர். 

அதாவது, சென்னை நகரில் நடை பயிற்சியில் இருந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியை நாய் ஒன்று கடித்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது. 

இதே போல, சிறுவர் சிறுமிகளையும் நாய் கடித்ததில் பலத்த காயமடைந்துள்ளனர். 

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை, ஒருபுறம் பொதுமக்கள் பாதுகாப்புக்காக வரவேற்கப்பட்டாலும், மற்றொர் பக்கம் இது விலங்குஇரக்கம் சார்பான விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

இதில், சில தெரு நாய்களிடம் ரேபிஸ் உள்ளிட்ட நோய் தொற்றுகள் இருப்பதால்  அந்த நாய்கள்  கடிக்கும் போது அவர்களுக்கும் அந்த நோய் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. 

அண்மையில் கூட ஒரு இளைஞர் நாய் கடித்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், அந்த நாயிடம் இருந்து பரவிய ரேபிஸ் நோய் தொற்று அவரது உடல் முழுவதும் பரவி  பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில், தமிழக அரசு .ந்த முடிவை எடுத்துள்ளது

எனவே,  நோய் வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்யலாம். இந்தப் பணியை பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். 

இதனால், தமிழகத்தில் நோய் வாய்ப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்து வரும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்யும் பட்சத்தில் தெரு நாய்களின் தொல்லை ஒரளவு குறையும் என்று தெரிகிறது.


தெரு நாய்கள் தொல்லை தீவிரம்: கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி தமிழகத்தில் தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோய்வாய்ப்பட்ட நிலையில் சுற்றித் திரியும் நாய்களை கருணைக்கொலை செய்யலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனுடன், அந்த நாய்களின் உடல்களை உரிய முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெரு நாய்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், கடந்த மாதங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நாய் கடி தாக்கத்தால் பலர் அவதியுற்றுள்ளனர். அதாவது, சென்னை நகரில் நடை பயிற்சியில் இருந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியை நாய் ஒன்று கடித்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது. இதே போல, சிறுவர் சிறுமிகளையும் நாய் கடித்ததில் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை, ஒருபுறம் பொதுமக்கள் பாதுகாப்புக்காக வரவேற்கப்பட்டாலும், மற்றொர் பக்கம் இது விலங்குஇரக்கம் சார்பான விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.இதில், சில தெரு நாய்களிடம் ரேபிஸ் உள்ளிட்ட நோய் தொற்றுகள் இருப்பதால்  அந்த நாய்கள்  கடிக்கும் போது அவர்களுக்கும் அந்த நோய் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. அண்மையில் கூட ஒரு இளைஞர் நாய் கடித்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், அந்த நாயிடம் இருந்து பரவிய ரேபிஸ் நோய் தொற்று அவரது உடல் முழுவதும் பரவி  பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், தமிழக அரசு .ந்த முடிவை எடுத்துள்ளதுஎனவே,  நோய் வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்யலாம். இந்தப் பணியை பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். இதனால், தமிழகத்தில் நோய் வாய்ப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்து வரும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்யும் பட்சத்தில் தெரு நாய்களின் தொல்லை ஒரளவு குறையும் என்று தெரிகிறது.

Advertisement

Advertisement

Advertisement