பாதுகாப்பு காரணங்களுக்காக சிவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிப்பதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகளை உரிய காலத்திற்குள் மீள கையளிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை பயிர்ச்செய்கைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்காக மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஏனைய தேவைகளுக்காக தற்போது துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
துப்பாக்கிகளைக் கையளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை பாதுகாப்பு காரணங்களுக்காக சிவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிப்பதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.துப்பாக்கிகளை உரிய காலத்திற்குள் மீள கையளிக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.இதேவேளை பயிர்ச்செய்கைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்காக மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.ஏனைய தேவைகளுக்காக தற்போது துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.