• May 20 2024

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடுமையாகும் சட்டங்கள்..! - ஜனாதிபதி அதிரடி உத்தரவு samugammedia

Chithra / May 15th 2023, 3:30 pm
image

Advertisement

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அண்மையில் களுத்துறையில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மற்றும் களுத்துறையில் ஆசிரியை ஒருவரால் 16 சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவாக தடுக்கவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அத்தகைய நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்ட அமைப்பு ஒன்றை உருவாக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் குழந்தைகளை பாதுகாப்பதற்கு தனியான சட்டமொன்றை கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக இந்த சட்ட அமைப்பை தயாரிக்கும் போது கையடக்கத் தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் மூலம் இடம்பெறுகின்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவித்துள்ளார்.

அதன்படி, உரிய சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வீட்டில் பெற்றோர்-குழந்தை உறவுகள் மற்றும் மனநலம் தொடர்பாக புதிய உரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்

சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க கடுமையாகும் சட்டங்கள். - ஜனாதிபதி அதிரடி உத்தரவு samugammedia நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.அண்மையில் களுத்துறையில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் மற்றும் களுத்துறையில் ஆசிரியை ஒருவரால் 16 சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்களை விரைவாக தடுக்கவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அத்தகைய நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்ட அமைப்பு ஒன்றை உருவாக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.நாட்டின் குழந்தைகளை பாதுகாப்பதற்கு தனியான சட்டமொன்றை கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்த சட்ட அமைப்பை தயாரிக்கும் போது கையடக்கத் தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் மூலம் இடம்பெறுகின்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அறிவித்துள்ளார்.அதன்படி, உரிய சட்டங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.பாடசாலை பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வீட்டில் பெற்றோர்-குழந்தை உறவுகள் மற்றும் மனநலம் தொடர்பாக புதிய உரையாடல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement