• Jul 15 2025

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு - மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Chithra / Jul 14th 2025, 1:01 pm
image

 

சிலாபம் முதல் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள பகுதிகளுக்கு  பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில், 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

சிலாபம் தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் காலி தொடக்கம் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் வீசும். 

சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான அத்துடன் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50  கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் வீசும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். 

இதேவேளை இக் கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல்நீர் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு - மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை  சிலாபம் முதல் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள பகுதிகளுக்கு  பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில், கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.சிலாபம் தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் காலி தொடக்கம் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் வீசும். சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான அத்துடன் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக வாகரை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50  கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும். இதேவேளை இக் கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல்நீர் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement