• Jan 07 2025

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்..!

Sharmi / Jan 4th 2025, 8:29 am
image

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(04) காலை வெளியிடப்பட்ட அறிவிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்றையதினம்(04), ஊவா மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யும்.  

அதேவேளை,  மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்  எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல். வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(04) காலை வெளியிடப்பட்ட அறிவிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அந்தவகையில் இன்றையதினம்(04), ஊவா மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யும்.  அதேவேளை,  மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழை பெய்யக்கூடும்.வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்  எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement