• Apr 30 2024

இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை..!அவுஸ்ரேலிய கிறீன்ஸ் கட்சி கண்டனம்...!samugammedia

Sharmi / Jun 21st 2023, 10:41 am
image

Advertisement

இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கண்டிப்பதாக அவுஸ்ரேலிய கிறீன்ஸ் கட்சியின் செனேட்டர் டேவிட் சூபிரிட்ஜ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்  அவுஸ்ரேலியப் பாராளுமன்றத்தில் உரையாற்றும்  போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

இலங்கை தமிழ் மக்களிற்கு எனது ஆதரவினை தெரிவிக்க விரும்புகின்றேன். தமிழ் அகதிகள் பேரவையின் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்விற்கு என்னை அழைத்தமைக்கு மகிழ்ச்சியடைகின்றேன்.

கடந்த மாதத்துடன் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 14 வருடமாகின்ற நிலையில், அதற்கு காரணமான எவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை.

தமிழ் மக்களின்  தனிநாட்டிற்கான போராட்டத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் போது முள்ளிவாய்க்காலில் சிக்கவைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதனை செய்தவர்கள் தற்பொழுதும் இலங்கை அரசாங்கத்திலும், இராணுவத்திலும் உயர் பதவிகளில் நீடிக்கின்றனர்.

எமது கட்சி இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கண்டிக்கின்றது. அத்துடன், தமிழ் மக்களிற்கான சுயநிர்ணய உரிமை பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு எமது கட்சி ஆதரவளிக்கின்றது.

அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழ் அகதிகள் தொடர்பான தீர்மானகள், முடிகள் குறித்த தகவல்களை பெறுவதில் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் இந்த நாட்டில்  தமிழ் அகதிகளின் அடைக்கல கோரிக்கைகளே அதிகளவு நிராகரிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை.அவுஸ்ரேலிய கிறீன்ஸ் கட்சி கண்டனம்.samugammedia இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கண்டிப்பதாக அவுஸ்ரேலிய கிறீன்ஸ் கட்சியின் செனேட்டர் டேவிட் சூபிரிட்ஜ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்  அவுஸ்ரேலியப் பாராளுமன்றத்தில் உரையாற்றும்  போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், இலங்கை தமிழ் மக்களிற்கு எனது ஆதரவினை தெரிவிக்க விரும்புகின்றேன். தமிழ் அகதிகள் பேரவையின் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்விற்கு என்னை அழைத்தமைக்கு மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த மாதத்துடன் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 14 வருடமாகின்ற நிலையில், அதற்கு காரணமான எவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை. தமிழ் மக்களின்  தனிநாட்டிற்கான போராட்டத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் போது முள்ளிவாய்க்காலில் சிக்கவைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதனை செய்தவர்கள் தற்பொழுதும் இலங்கை அரசாங்கத்திலும், இராணுவத்திலும் உயர் பதவிகளில் நீடிக்கின்றனர். எமது கட்சி இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கண்டிக்கின்றது. அத்துடன், தமிழ் மக்களிற்கான சுயநிர்ணய உரிமை பாதுகாப்பு மற்றும் சமாதானத்திற்கு எமது கட்சி ஆதரவளிக்கின்றது. அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழ் அகதிகள் தொடர்பான தீர்மானகள், முடிகள் குறித்த தகவல்களை பெறுவதில் கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் இந்த நாட்டில்  தமிழ் அகதிகளின் அடைக்கல கோரிக்கைகளே அதிகளவு நிராகரிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement