ஓடும் பேருந்தின் மிதிபலகையில் இருந்து மாணவன் ஒருவர் தவறி கீழே விழுந்த காட்சி காணொளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குருநாகல் பகுதியில் இன்று சற்று முன்னர் நிகழ்ந்துள்ளது.
குருநாகலில் தனியார் பேருந்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்துள்ளனர். பேருந்தில் சன நெரிசல் அதிகமானதால் மாணவர்கள் சிலர் பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்துள்ளனர்.
இவ்வாறு பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென மிதிபலகையிலிருந்து மாணவர் ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பேருந்து தரிப்பிடத்திலிருந்து சென்ற காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாகி வெளிவந்துள்ளது. மாணவன் கீழே விழுந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன நெரிசலால் மாணவன் தவறி விழுந்தாரா அல்லது பேருந்தின் அதிவேகத்தால் தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் பலரிடத்திலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பேருந்தின் மிதிபலகையிலிருந்து தவறி விழுந்த மாணவன் ஓடும் பேருந்தின் மிதிபலகையில் இருந்து மாணவன் ஒருவர் தவறி கீழே விழுந்த காட்சி காணொளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குருநாகல் பகுதியில் இன்று சற்று முன்னர் நிகழ்ந்துள்ளது. குருநாகலில் தனியார் பேருந்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்துள்ளனர். பேருந்தில் சன நெரிசல் அதிகமானதால் மாணவர்கள் சிலர் பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்துள்ளனர். இவ்வாறு பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென மிதிபலகையிலிருந்து மாணவர் ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளார். இந்தச் சம்பவம் பேருந்து தரிப்பிடத்திலிருந்து சென்ற காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாகி வெளிவந்துள்ளது. மாணவன் கீழே விழுந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சன நெரிசலால் மாணவன் தவறி விழுந்தாரா அல்லது பேருந்தின் அதிவேகத்தால் தவறி விழுந்தாரா என்ற கோணத்தில் பலரிடத்திலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.