யூடியூப் வீடியோ பார்த்து பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலை கழிவறையில் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தஞ்சாவூர் கும்பகோணத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தஞ்சாவூர் கும்பகோணத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் கல்லி பயிலும் மாணவி ஒருவர் திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பமாகியுள்ளார்.
குறித்த மாணவி தான் கர்ப்பமானதை தனது வீட்டாருக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தெரியாமல் மறைத்த நிலையில், நேற்று முன்தினம் வகுப்பறையில் கல்வி பயின்ற வேளை மாணவிக்கு குறித்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதனையடுத்து அம் மாணவி, தனக்கு வயிறு வலிப்பதாக கூறி கழிவறைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கழிவறையில் குறித்த மாணவிக்கு குழந்தை பிறந்த நிலையில், யூடியூப் வீடியோ பார்த்து தொப்புள் கொடியை வெட்டிவிட்டு குழந்தையை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு கழிவறையை விட்டு வெளியேறி வகுப்பறைக்கு சென்றுள்ளார்.
இதன்போது குறித்த மாணவியின் உடையில் இரத்தக்கரை இருப்பதை சக மாணவிகள் அவதானித்தனர்.
இது தொடர்பில் சக மாணவிகள் வினவியபோது தனக்கு மாதவிடாய் வந்தது என்று கூறியுள்ளனர்.
எனினும் இரத்தப்போக்கு அதிகரித்ததால் உடனடியாக சக மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது குறித்த மாணவிக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, உடனடியாக மாணவர்கள் விசாரித்து குப்பை தொட்டியில் இருந்து குழந்தையை மீட்டனர்.
அங்கு உடனடியாக குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலையில் குழந்தையை பிரசவித்த மாணவி. யூடியூப் வீடியோ பார்த்து பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலை கழிவறையில் குழந்தையொன்றை பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவம் தஞ்சாவூர் கும்பகோணத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தஞ்சாவூர் கும்பகோணத்தில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் கல்லி பயிலும் மாணவி ஒருவர் திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பமாகியுள்ளார்.குறித்த மாணவி தான் கர்ப்பமானதை தனது வீட்டாருக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் தெரியாமல் மறைத்த நிலையில், நேற்று முன்தினம் வகுப்பறையில் கல்வி பயின்ற வேளை மாணவிக்கு குறித்த மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அம் மாணவி, தனக்கு வயிறு வலிப்பதாக கூறி கழிவறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கழிவறையில் குறித்த மாணவிக்கு குழந்தை பிறந்த நிலையில், யூடியூப் வீடியோ பார்த்து தொப்புள் கொடியை வெட்டிவிட்டு குழந்தையை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு கழிவறையை விட்டு வெளியேறி வகுப்பறைக்கு சென்றுள்ளார்.இதன்போது குறித்த மாணவியின் உடையில் இரத்தக்கரை இருப்பதை சக மாணவிகள் அவதானித்தனர்.இது தொடர்பில் சக மாணவிகள் வினவியபோது தனக்கு மாதவிடாய் வந்தது என்று கூறியுள்ளனர். எனினும் இரத்தப்போக்கு அதிகரித்ததால் உடனடியாக சக மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது குறித்த மாணவிக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தது.இதனையடுத்து, உடனடியாக மாணவர்கள் விசாரித்து குப்பை தொட்டியில் இருந்து குழந்தையை மீட்டனர். அங்கு உடனடியாக குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மருத்துவர்கள் குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.