• Feb 03 2025

USAIDஐ முடக்கும் பணிகள் நடந்து வருவதாக எலோன் மஸ்க் தெரிவிப்பு!

Tharmini / Feb 3rd 2025, 4:16 pm
image

அமெரிக்க வெளிநாட்டு உதவி நிறுவனமான USAID ஐ மூடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூட்டாட்சி அரசாங்கத்தை சுருக்குவதற்கான முயற்சிக்கு தலைமை தாங்கும் பில்லியனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

 ன்று (03) எக்ஸ் தளத்தினூடான ஒரு சமூக ஊடக விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசுவாமி மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோனி எர்ன்ஸ்ட் மற்றும் மைக் லீ ஆகியோர் அடங்கிய உரையாடலின் போது, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவர் நிலையத்தினை (USAID ) மூடுவதற்கு தாங்கள் செயல்படுவதாக மஸ்க் கூறினார்.

இந்த முகவர் நிலையம் புனரமைப்பு செய்யப்பட முடியாதது என்றும், இது மூடப்பட வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புவதாகவும் பில்லியனர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ரொய்ட்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியின் படி, ட்ரம்ப் நிர்வாகம் USAID இல் இரண்டு உயர் பாதுகாப்பு அதிகாரிகளை வார இறுதியில் வெளியேற்றியது.

மஸ்கின் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) பிரதிநிதிகள் USAID கட்டிடத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு அணுகலைப் பெறுவதை அதிகாரிகள் தடுக்க முயன்ற பின்னர் இந்த வெளியேற்றம் அமைந்திருந்தது.

2023 இல் அமெரிக்கா கிட்டத்தட்ட 180 நாடுகளுக்கு விநியோகித்த 72 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவியில் பாதிக்கு மேல் USAID நிர்வகிக்கிறது.

மோதல் மண்டலங்களில் உள்ள பெண்களின் ஆரோக்கியம் முதல் சுத்தமான தண்ணீர், எச்ஐவி/எய்ட்ஸ் சிகிச்சைகள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்புப் பணிகள் வரை இதன் மூலமாக அமெரிக்கா வழங்கியது.

இது 2024 இல் ஐக்கிய நாடுகள் சபையால் கண்காணிக்கப்பட்ட அனைத்து மனிதாபிமான உதவிகளில் 42% ஐ வழங்கியது.

USAID இன் இணையதளம் சனிக்கிழமையன்று ஆஃப்லைனில் (அணுக முடியாது) இருப்பதாகத் குறிப்பிடப்பட்டது மற்றும் சில பயனர்கள் ஞாயிற்றுக்கிழமை அதை அணுக முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

USAID நிறுவனத்தில் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.

ட்ரம்ப் தனது “அமெரிக்கா முதல்” கொள்கையின் ஒரு பகுதியாக பெரும்பாலான அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை உலகளாவிய முடக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இது ஏற்கனவே உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்புகிறது.

தாய்லாந்து அகதிகள் முகாம்களில் உள்ள கள மருத்துவமனைகள், போர் வலயங்களில் கண்ணிவெடி அகற்றுதல், எச்.ஐ.வி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் ஆகியவை நீக்கப்படும் அபாயத்தில் உள்ள திட்டங்களில் அடங்கும்.

அமெரிக்க செலவுகள் மற்றும் மோசடிகளைக் குறைப்பது பற்றி மேலும் விரிவாகப் பேசுகையில், அடுத்த ஆண்டு அமெரிக்க பற்றாக்குறையிலிருந்து $1 டிரில்லியன் டாலர்களை ட்ரம்ப் நிர்வாகம் குறைக்க முடியும் என்று மஸ்க் மதிப்பிட்டார்.

USAIDஐ முடக்கும் பணிகள் நடந்து வருவதாக எலோன் மஸ்க் தெரிவிப்பு அமெரிக்க வெளிநாட்டு உதவி நிறுவனமான USAID ஐ மூடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூட்டாட்சி அரசாங்கத்தை சுருக்குவதற்கான முயற்சிக்கு தலைமை தாங்கும் பில்லியனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இன்று (03) எக்ஸ் தளத்தினூடான ஒரு சமூக ஊடக விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.முன்னாள் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசுவாமி மற்றும் குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோனி எர்ன்ஸ்ட் மற்றும் மைக் லீ ஆகியோர் அடங்கிய உரையாடலின் போது, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவர் நிலையத்தினை (USAID ) மூடுவதற்கு தாங்கள் செயல்படுவதாக மஸ்க் கூறினார்.இந்த முகவர் நிலையம் புனரமைப்பு செய்யப்பட முடியாதது என்றும், இது மூடப்பட வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புவதாகவும் பில்லியனர் இதன்போது சுட்டிக்காட்டினார்.ரொய்ட்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியின் படி, ட்ரம்ப் நிர்வாகம் USAID இல் இரண்டு உயர் பாதுகாப்பு அதிகாரிகளை வார இறுதியில் வெளியேற்றியது.மஸ்கின் அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) பிரதிநிதிகள் USAID கட்டிடத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு அணுகலைப் பெறுவதை அதிகாரிகள் தடுக்க முயன்ற பின்னர் இந்த வெளியேற்றம் அமைந்திருந்தது.2023 இல் அமெரிக்கா கிட்டத்தட்ட 180 நாடுகளுக்கு விநியோகித்த 72 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவியில் பாதிக்கு மேல் USAID நிர்வகிக்கிறது.மோதல் மண்டலங்களில் உள்ள பெண்களின் ஆரோக்கியம் முதல் சுத்தமான தண்ணீர், எச்ஐவி/எய்ட்ஸ் சிகிச்சைகள், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்புப் பணிகள் வரை இதன் மூலமாக அமெரிக்கா வழங்கியது.இது 2024 இல் ஐக்கிய நாடுகள் சபையால் கண்காணிக்கப்பட்ட அனைத்து மனிதாபிமான உதவிகளில் 42% ஐ வழங்கியது.USAID இன் இணையதளம் சனிக்கிழமையன்று ஆஃப்லைனில் (அணுக முடியாது) இருப்பதாகத் குறிப்பிடப்பட்டது மற்றும் சில பயனர்கள் ஞாயிற்றுக்கிழமை அதை அணுக முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.USAID நிறுவனத்தில் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.ட்ரம்ப் தனது “அமெரிக்கா முதல்” கொள்கையின் ஒரு பகுதியாக பெரும்பாலான அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை உலகளாவிய முடக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.இது ஏற்கனவே உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்புகிறது.தாய்லாந்து அகதிகள் முகாம்களில் உள்ள கள மருத்துவமனைகள், போர் வலயங்களில் கண்ணிவெடி அகற்றுதல், எச்.ஐ.வி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள் ஆகியவை நீக்கப்படும் அபாயத்தில் உள்ள திட்டங்களில் அடங்கும்.அமெரிக்க செலவுகள் மற்றும் மோசடிகளைக் குறைப்பது பற்றி மேலும் விரிவாகப் பேசுகையில், அடுத்த ஆண்டு அமெரிக்க பற்றாக்குறையிலிருந்து $1 டிரில்லியன் டாலர்களை ட்ரம்ப் நிர்வாகம் குறைக்க முடியும் என்று மஸ்க் மதிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement