• Mar 09 2025

நோர்வே பாடசாலை மாணவர்கள் முகமாலை பகுதிக்கு விஜயம்..!

Sharmi / Mar 8th 2025, 4:26 pm
image

FORUT/RAHAMA நிறுவனத்திற்கு நிதி வழங்கும் நோர்வே நாட்டின் V.G.J மற்றும் கொட்லன்ட் உயர்தர பாடசாலைகளின் மாணவர்கள் நேற்று(7) முகமாலை பகுதிக்கு விஜயம் செய்தனர்

 யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களுக்கு தற்காலிக வீட்டுத்திட்டம்,மலசல கூடம்,கிணறு மற்றும் வீட்டுத்தோட்டம் செய்வதற்கான உதவிகளை   FORUT/RAHAMA  நிறுவனம் வழங்கி வருகின்றது

குறித்த நிறுவனத்திற்கு பிரதானமாக நிதி வழங்கிவரும் நோர்வே நாட்டில் உள்ள V.G.J மற்றும் கொட்லன்ட் உயர்தர பாடசாலைகளின் மாணவர்கள் தங்களுடைய நாட்டில் இருந்து நிதி அனுப்பி போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்ககு  அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

அந்தவகையில் பளை பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முகமாலை,வேம்படிக்கேணி,கிளாலி,இத்தாவில் போன்ற பகுதிகளில் மீள் குடியேறியவர்களுக்கான வீடுகள்,கிணறுகள்,மலசலகூட வசதிகளை 2023 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்

இந்த நிறுவனத்திற்கு நிதி வழங்கும் V.G.J மற்றும் கொட்லன்ட் உயர்தர பாடசாலை மாணவர்கள் நேற்று(7) குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்களை சந்தித்து கலந்துரையாடி நடைபெற்ற வேலைத்திட்டங்களை கண்காணித்ததோடு மரக்கன்றுகளையும் நாட்டிவைத்தனர்.

வீடுகளை பெற்ற பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் நோர்வே நாட்டின்  உயர்தர பாடசாலை மாணவர்களால் வழங்கப்பட்டதுடன் கண்ணிவெடிகளை அகற்றி மேலதிகமாக விடுவிக்கப்படும் பகுதிகளில் குடியமரும் மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.



நோர்வே பாடசாலை மாணவர்கள் முகமாலை பகுதிக்கு விஜயம். FORUT/RAHAMA நிறுவனத்திற்கு நிதி வழங்கும் நோர்வே நாட்டின் V.G.J மற்றும் கொட்லன்ட் உயர்தர பாடசாலைகளின் மாணவர்கள் நேற்று(7) முகமாலை பகுதிக்கு விஜயம் செய்தனர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களுக்கு தற்காலிக வீட்டுத்திட்டம்,மலசல கூடம்,கிணறு மற்றும் வீட்டுத்தோட்டம் செய்வதற்கான உதவிகளை   FORUT/RAHAMA  நிறுவனம் வழங்கி வருகின்றதுகுறித்த நிறுவனத்திற்கு பிரதானமாக நிதி வழங்கிவரும் நோர்வே நாட்டில் உள்ள V.G.J மற்றும் கொட்லன்ட் உயர்தர பாடசாலைகளின் மாணவர்கள் தங்களுடைய நாட்டில் இருந்து நிதி அனுப்பி போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்ககு  அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.அந்தவகையில் பளை பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முகமாலை,வேம்படிக்கேணி,கிளாலி,இத்தாவில் போன்ற பகுதிகளில் மீள் குடியேறியவர்களுக்கான வீடுகள்,கிணறுகள்,மலசலகூட வசதிகளை 2023 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்இந்த நிறுவனத்திற்கு நிதி வழங்கும் V.G.J மற்றும் கொட்லன்ட் உயர்தர பாடசாலை மாணவர்கள் நேற்று(7) குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்களை சந்தித்து கலந்துரையாடி நடைபெற்ற வேலைத்திட்டங்களை கண்காணித்ததோடு மரக்கன்றுகளையும் நாட்டிவைத்தனர்.வீடுகளை பெற்ற பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் நோர்வே நாட்டின்  உயர்தர பாடசாலை மாணவர்களால் வழங்கப்பட்டதுடன் கண்ணிவெடிகளை அகற்றி மேலதிகமாக விடுவிக்கப்படும் பகுதிகளில் குடியமரும் மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement