• Oct 02 2024

மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தரமற்ற மருந்துகள்? CID யில் முறைப்பாடு

Chithra / Oct 1st 2024, 12:36 pm
image

Advertisement

 

தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள், நாட்டுக்கு மீண்டும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர், சமன் சன்ஜீவ நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தரமற்ற மருந்து மற்றும் தடுப்பூசிகள் சந்தையில் விநியோகிக்கப்பட்டு, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவங்கள் கடந்த காலங்களில் நாட்டில் நிகழ்ந்திருந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை நடத்தியிருந்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் இந்தியாவிலிருந்து தரமற்ற மனித இம்யுனோகுளோபின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுதொடர்பாக தீவிர மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தரமற்ற மருந்துகள் CID யில் முறைப்பாடு  தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள், நாட்டுக்கு மீண்டும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர், சமன் சன்ஜீவ நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.தரமற்ற மருந்து மற்றும் தடுப்பூசிகள் சந்தையில் விநியோகிக்கப்பட்டு, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவங்கள் கடந்த காலங்களில் நாட்டில் நிகழ்ந்திருந்தன.இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை நடத்தியிருந்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர்.இந்த நிலையில், மீண்டும் இந்தியாவிலிருந்து தரமற்ற மனித இம்யுனோகுளோபின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இதுதொடர்பாக தீவிர மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement