• Apr 10 2025

நீதிமன்ற உத்தியோகத்தர் வீட்டில் திடீரென மாயமான நகைகள்...! பொலிஸார் அதிரடி...!samugammedia

Sharmi / Feb 3rd 2024, 1:30 pm
image

யாழ் நெல்லியடி பகுதியில், நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

39 மற்றும் 27 வயதான இருவர் கைது செய்யப்பட்டதுடன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளுக்கமைய இருவரும் நெல்லியடி பகுதியில் நேற்று(02) கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் கடந்த வருடத்தின் முற்பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாகவே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


நீதிமன்ற உத்தியோகத்தர் வீட்டில் திடீரென மாயமான நகைகள். பொலிஸார் அதிரடி.samugammedia யாழ் நெல்லியடி பகுதியில், நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.39 மற்றும் 27 வயதான இருவர் கைது செய்யப்பட்டதுடன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளுக்கமைய இருவரும் நெல்லியடி பகுதியில் நேற்று(02) கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் கடந்த வருடத்தின் முற்பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பாகவே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now