• Nov 24 2024

கோட்டா ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சீனி மோசடி குறித்து மீண்டும் விசாரணைகள்!

Chithra / Oct 21st 2024, 10:28 am
image

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய சீனி மோசடி தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கோட்டாபயவின் அப்போதைய செயலாளர்களது அலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி இலக்கங்களின் வழியான தொடர்பாடல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சீனி வரி மோசடியினால் அரசாங்கத்திற்கு 14 பில்லியன் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பிலான கணக்காய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒரு இறக்குமதியாளருக்கு சாதக நிலை ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக பெருந்தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் மீண்டும் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

கோட்டா ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சீனி மோசடி குறித்து மீண்டும் விசாரணைகள்  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய சீனி மோசடி தொடர்பிலான விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கோட்டாபயவின் அப்போதைய செயலாளர்களது அலைபேசி மற்றும் நிலையான தொலைபேசி இலக்கங்களின் வழியான தொடர்பாடல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சீனி வரி மோசடியினால் அரசாங்கத்திற்கு 14 பில்லியன் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இந்த சம்பவம் தொடர்பிலான கணக்காய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.ஒரு இறக்குமதியாளருக்கு சாதக நிலை ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளதாகவும் இதன் ஊடாக பெருந்தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் மீண்டும் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement