ஒரு சில கலைஞர்கள் மாத்திரமே இயக்குனர்களாக அறிமுகமாகி பின்பு நடிகராகவும் மாறி இரண்டு துறையிலும் சிறந்து விளங்குபவர்களாக காணப்படுவர். அவ்வாறு இருக்கும் சுந்தர். சி கூறிய விடயங்கள் பெரிதும் வைரலாகி வருகின்றது.
அன்பே சிவம் , அருணாச்சலம் , அரண்மனை , கலகலப்பு போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சுந்தர்சி ஆவார்.இவரது இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த வின்னர் திரைப்படத்தை பற்றி இவர் சில விடயங்களை கூறியுள்ளார்.
இவர் கூறுகையில் "என்னுடைய படங்களை உரிமம் வாங்காமல் காப்பி அடித்து தெலுங்கில் படம் எடுத்தார்கள். அதற்கு பழி தீர்க்கும் வகையில் 4 படங்களை காப்பி அடித்து எழுதிய படம்தான் 'வின்னர்'.
ஹீரோவை ஹீரோயின் அடி வாங்க வைப்பது போல ஒரு படத்தில் இருந்த காட்சியை, அப்படியே காப்பி அடிக்காமல் லேசாக மாற்றி, 'இதோ வந்துட்டேன்' என வடிவேலு குறுக்கே வந்து விழும் காட்சியை எடுத்தேன். நான் தெலுங்கில் இருந்து காப்பி அடித்ததை, அப்படியே காப்பி அடித்து வேறொரு தெலுங்கு படத்தில் வைத்துவிட்டார்கள். அப்போது என்னுடைய தோல்வியை நான் ஒப்புக்கொண்டேன் என்றார்.
பழிவாங்க முயன்று மண்ணை கவ்விய சுந்தர். சி. அவரே உடைத்த உண்மை ஒரு சில கலைஞர்கள் மாத்திரமே இயக்குனர்களாக அறிமுகமாகி பின்பு நடிகராகவும் மாறி இரண்டு துறையிலும் சிறந்து விளங்குபவர்களாக காணப்படுவர். அவ்வாறு இருக்கும் சுந்தர். சி கூறிய விடயங்கள் பெரிதும் வைரலாகி வருகின்றது.அன்பே சிவம் , அருணாச்சலம் , அரண்மனை , கலகலப்பு போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சுந்தர்சி ஆவார்.இவரது இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த வின்னர் திரைப்படத்தை பற்றி இவர் சில விடயங்களை கூறியுள்ளார்.இவர் கூறுகையில் "என்னுடைய படங்களை உரிமம் வாங்காமல் காப்பி அடித்து தெலுங்கில் படம் எடுத்தார்கள். அதற்கு பழி தீர்க்கும் வகையில் 4 படங்களை காப்பி அடித்து எழுதிய படம்தான் 'வின்னர்'.ஹீரோவை ஹீரோயின் அடி வாங்க வைப்பது போல ஒரு படத்தில் இருந்த காட்சியை, அப்படியே காப்பி அடிக்காமல் லேசாக மாற்றி, 'இதோ வந்துட்டேன்' என வடிவேலு குறுக்கே வந்து விழும் காட்சியை எடுத்தேன். நான் தெலுங்கில் இருந்து காப்பி அடித்ததை, அப்படியே காப்பி அடித்து வேறொரு தெலுங்கு படத்தில் வைத்துவிட்டார்கள். அப்போது என்னுடைய தோல்வியை நான் ஒப்புக்கொண்டேன் என்றார்.